திங்கள், 6 செப்டம்பர், 2010

பயில்வோம் பங்கு சந்தை பாகம் - 11

கடந்த வாரம் Fibonacci அளவுகளை எப்படி பயன்படுத்துவது என்றும், மீதமுள்ள semi cup, semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்த்தோம், தற்பொழுது inverted cup, inverted cup with handle, inverted semi cup , inverted semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்,

இதற்க்கு முன் ஒரு விஷயம் அதாவது கடந்த பதிவுகளில் நாம் cup, cup with handle, semi cup, semi cup with handle போன்ற வடிவங்களை பற்றி பார்த்தோம் இல்லையா, அதையே தான் இபொழுது பார்க்கப்போகிறோம் ஆனால் இங்கு inverted என்ற வார்த்தை சேர்ந்து இருப்பதால் இந்த வடிவங்கள் எல்லாம் தலை கீழாக அமையும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளை பார்க்கப் போகிறோம்,

வேறு ஒன்றும் இல்லை இந்த வடிவங்கள் சந்தையில் ஏற்படப்போகும் இறங்கு முகங்களை சுட்டி காட்டுகிறது, எப்படி முன்னர் பார்த்த வடிவங்கள் எல்லாம் break out பெற்றவுடன் தொடர்ந்து உயர்வதற்கு உதவி செய்ததோ, அதே போல் இந்த வடிவங்கள் எல்லாம் break out பெற்றவுடன் தொடர்ந்து இறங்குவதற்கு உதவி செய்யும், மேலும் இதற்க்கான இலக்குகள் எல்லாம் முன்னர் எப்படி கணக்கிட்டோமோ அதே போல் தான்,

மேலும் இதில் சிறப்பாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஆகவே இந்த தலைப்புகளுக்கு உரிய படத்தினை தருகிறேன், படத்தை பாருங்கள் மேலும் நாம் முன்னர் பார்த்த cup, cup with handle, semi cup, semi cup with handle ஆகிய வடிவங்களுக்கான விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள், அவளவு தான் எளிதாக் புரிந்து விடும், சந்தேகங்கள் இருந்தால் பின்னோட்டம் இடுங்கள்,









சரி அடுத்த வடிவங்களை பற்றி இப்பொழுது பார்ப்போம் HEAD & SHOULDER PATTERN…

HEAD & SHOULDER PATTERN

இந்த அமைப்பை பொறுத்தவரை, நமது chart படங்களில் ஏற்படும் இந்த வடிவமானது ஒரு மனிதனின் தலை மற்றும் இரண்டு பக்கங்களிலும் உள்ள தோள்பட்டைகளை ஞாபகம் செய்வது போல் இருந்ததால் இந்த வடிவத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது போன்ற வடிவங்கள் ஏற்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட விளைவுகள் அதன் break outற்கு பிறகு நடந்து வந்ததால்! இந்த விளைவுகளை தொகுத்து நமக்கு தந்தார்கள், அவைகளை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,

முதலில் இது போன்ற HEAD & SHOULDER PATTERN ஏற்படுவது உடனே நிகழ்ந்து விடுவது இல்லை, மேலும் இந்த வடிவம் முழுவதுமாக அமைந்து முழு வடிவம் பெற்று break out பெறுவதற்கு நல்ல கால நேரம் பிடிக்கும், மேலும் இதற்க்கு என்று சில விதி முறைகளும் உண்டு, முதலில் இந்த வடிவத்தின் ஒரு shoulder வடிவம் ஏற்படும், பிறகு head என்ற வடிவம் ஏற்படும், பிறகு அடுத்த பக்கம் உள்ள shoulder உருவாகும்,

இவ்வாறு இந்த அனைத்து வடிவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட பின்பு break out என்ற நிலை அடைய வேண்டும் இல்லையா, அதற்காக இறுதியாக ஏற்பட்ட shoulder இன் முடிவில் neck line என்ற ஒரு விசயமும் ஏற்படும், அதாவது இந்த neck line என்பது, இந்த மொத்த முழு வடிவத்தையும் ஒரு கோட்டினால் இணைத்தால்! எந்த இடத்தில் இறுதியாக ஏற்பட்ட shoulder இன் பகுதிகள் இந்த இணைப்பு கோட்டை வெட்டுகிறதோ அந்த இடம் neck line எனப்படும்,

இந்த அமைப்பின் படி neck line உடைபட்டவுடன், அடுத்து தொடர் உயர்வுகள் இருக்கும், அதே நேரம் neck line உடைபட்ட பின்பு சற்று உயர்வுகள் ஏற்பட்டு மறுபடியும் இவ்வாறு ஏற்பட்ட இந்த அமைப்பின் break out உண்மையாகவே பலம் வாய்ந்ததா! சக்தியுடன் தொடர்ந்து செல்லுமா! என்பதினை சோதனை செய்ய! நாம் முன்னர் பார்த்த Fibonacci அளவுகளின் படி சற்று கீழே இறங்கி சோதனை செய்து, இறக்கம் ஏற்படும் பொழுது buying power எப்படி உள்ளது என்பதினை உறுதி செய்து கொண்டு மறுபடியும் தொடர்ந்து உயரும்,

மேலும் இதில் முதல் இலக்காக shoulder உயரம் செயல்படும், பிறகு head என்ற அமைப்பின் உயரம் அடுத்த இலக்காக இருக்கும், இந்த வடிவத்தின் மொத்த இலக்குகளும் சற்று நேரம் எடுத்தே அடையும், அதாவது தின வர்த்தக chart இல் இவ்வாறு ஏற்படின் இரண்டு மூன்று தினங்களிலோ, EOD எனப்படும் end of the day chart இல் ஏற்படின் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேல் நேரம் எடுத்தோ தனது இலக்குகளை அடையும் (இதில் விதி விளக்குகள் உண்டு),

மேலும் இந்த அமைப்பின் s/l ஆக இறுதியாக ஏற்பட்ட shoulder இன் கடை நிலை புள்ளி செயல்படும், மேலும் இந்த s/l ஆனது closing முறையில் தொடர்ந்து இரண்டு தினங்கள் அமைய வேண்டும், அப்பொழுது தான் உண்மையான s/l ஆக எடுத்துக்கொள்ளலாம், சரி HEAD & SHOULDER PATTERN ஐ பற்றி முக்கியமான விசயங்களை பார்த்தாகி விட்டது, இப்பொழுது இந்த HEAD & SHOULDER PATTERN இல் உள்ள சில வகைகள் பற்றியும் அதில் ஏற்படும் சில விளைவுகள் பற்றியும் பார்ப்போம்

HEAD & SHOULDER PATTERN இன் வகைகள்

இந்த அமைப்பில் இரண்டு வகைகள் உள்ளது ஒன்று NORMAL HEAD & SHOULDER PATTERN, மற்றொன்று REVERSAL HEAD & SHOULDER PATTERN, இந்த இரண்டு வகைகளுக்குள்ளும் மேலும் சில உள் பிரிவுகளும் வகைகளும் உள்ளது

Head Shoulder பற்றி ஆரம்பித்து இருந்தோம் இல்லையா, இந்த வாரம் இதனை பற்றி சற்று முழுமையாக பார்ப்போம், கடந்த வாரத்தில் இந்த Head Shoulder ல் இரண்டு வகைகள் உண்டு என்றும், அவைகள் முறையே Normal HnS, மற்றும் Inverted HnS என்றும் பார்த்தோம்,

மேலும் இதன் உள்ளே மேலும் சில உருவங்கள் உண்டு என்றும் பார்த்தோம் இல்லையா அவைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம், அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் ஏற்படும் பொழுது எப்படி இந்த அமைப்பின் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பார்த்தோம், இப்பொழுது இந்த அமைப்பின் உள்ளே உள்ள மேலும் சில உள் அமைப்புகளை பற்றி பார்ப்போம்

HEAD & SHOULDER இல் உள்ள வகைகள்

இந்த அமைப்பில் மூன்று விதமான வடிவங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அவைகள் முறையே Normal HnS, Raising HnS, Sloping HnS,

NORMAL HNS

பொதுவாக normal HnS என்ற வடிவம் ஒரு குறிப்பிட்ட பங்கில் ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட பங்கு தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட போகிறது என்பதினை நமக்கு உணர்த்தும், இதன் தொடர்ச்சியாக அந்த வடிவத்தின் Neck line எனப்படும் break down point உடைபட்டவுடன் கீழே இறங்க ஆரம்பிக்கும்,

இவ்வாறு இறங்கும் போது அதன் முதல் இலக்காக கடைசியாக ஏற்பட்ட shoulder இன் உயரம் இருக்கும், பிறகு head இன் உயரம் அடுத்த இலக்காக இருக்கும், இதன் s/l ஆக இறுதியாக ஏற்ப்பட்ட shoulder இன் top point செயல்படும், s/l ஐ கடைபிடிப்பது ஒரு வகையான கலை! அதற்க்கு வேறு சில முறைகளையும் நாம் பயன்படுத்தலாம்,

RAISING HNS

இந்த வடிவமும் இறங்கு முகத்தையே நமக்கு உணர்த்தும்! அதே நேரம் normal HnS ஓரளவிற்கு தெளிவாக தனது வடிவத்தை காட்டும், ஆனால் இந்த raising HnS இல் இது போன்ற தெளிவான வடிவமைப்புகள் நமக்கு எப்பொழுதும் கிடைக்காது, அதே நேரம் இந்து போன்ற வடிவம் ஏற்பட்டு neck line எனப்படும் break down point உடைபட்டால் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், இலக்குகள் முன்னர் பார்த்த முறையில் தான் கணக்கிடப்பட வேண்டும், Raising HnS என்பது ஒரு 120 to 150 என்ற டிகிரி கோணத்தில் chart படங்களில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்

SLOPING HNS,

இந்த வடிவமும் இறங்கு முகத்தையே நமக்கு உணர்த்தும் அதே நேரம் சற்று கீழிறங்கி சாய்வாக இந்த வடிவம் ஏற்படும், அதாவது ஒரு 230 to 250 டிகிரி என்ற கோணத்தில் இந்த வடிவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் , இது போன்ற வடிவம் ஏற்பட்டு neck line எனப்படும் break down point உடைபட்டால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம்,

இலக்குகள் முன்னர் பார்த்த முறையில் தான் கணக்கிடப்பட வேண்டும், இந்த sloping HnS இல் நெக் லைன் உடைபட்டவுடன் sell பண்ணுவதற்கும் முன் அநேக விசயங்களை சரி பார்க்க வேண்டும், ஏனெனில் இந்த வடிவம் நம்மை ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம்

பொதுவாகவே HnS அமைப்புகள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் இது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினாலேயே இதில் அதிக வில்லங்கங்களும் நிறைந்து இருக்கும், அதாவது எந்த பொருளுக்கு demand அதிகம் இருக்கோ அந்த பொருளுக்கு எப்பொழுது ஒரு duplicate இருக்கும் இல்லையா அதே போல் தான், சற்று நிதானமாக அனைத்து விசயங்களையும் சரி பார்த்து சரியான முடிவுக்கு வர வேண்டும்,

மேலும் இதில் neck line எனப்படும் break down point உடைபட்டவுடன் சற்று இறக்கம் ஏற்பட்டு பிறகு இந்த break down உண்மையானது தானா! சக்தி வாய்ந்தது தானா! என்று பரிசோதிக்க மறுபடியும் மேலேற்றி சோதனை செய்யும் வாய்ப்புகள் எப்பொழுது உண்டு, ஆகவே தெளிவாக செயல்படவேண்டும்,

மேலும் பொதுவாகவே பங்கு சந்தைகளில் ஒரு விஷயம் உண்டு அதாவது அனைவருக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டால் அந்த விஷயம் எதிர்மறையாகவே நடைபெறும் என்று, இதை போலவே இந்த அமைப்பு HnS என்று அனைவரும் உறுதி செய்துவிட்டால் அதில் அநேக பிரச்சனைகள் ஏற்படும்! மிரட்டல் உருட்டல் எல்லாம் நடந்து அனைவரையும் பயமுறுத்தி ஒரு வழி செய்து பிறகு தான் தனது இலக்கை அடையும்,

மேலும் இந்த மிரட்டல் உருட்டல் நேரங்களில் அநேகம் பேர் தங்களது நிலைகளில் இருந்து வெளியேறும் நிகழ்வுகளும் நடக்கும் (அரசியல இது எல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்) ஆகவே எச்சரிக்கை எப்பொழுதும் தேவை, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது என்பது போர்க்களத்தில் நிற்பது போல! கரணம் தப்பினால் மரணம் தான், எச்சரிக்கையாக இருந்தால் அநேக பரிசுகள் உங்களுக்காக எப்பொழுதும் காத்து இருக்கும்...

INVERTED HNS

இது Normal HnS க்கு அப்படியே எதிர்பதமானது, அதாவது இது போன்ற அமைப்புகள் ஏற்படும் போது அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு அந்த பங்கு தயாராகி வருகிறது என்றே கொள்ளவேண்டும், மேலும் முன்னர பார்த்த முறையில் தான் இதற்க்கான இலக்குகளும் நிர்ணயிக்கப்படும், neck line எனப்படும் break out point உடைபட்டவுடன் தொடர் உயர்வுகள் ஏற்படத்தொடங்கும், அதே நேரம் முன்னர் பார்த்தது போல இந்த break out சக்தி வாய்ந்ததா என்று உறுதி செய்துகொள்ள சற்று கீழே இறங்கவும் வாய்ப்புகள் உண்டு,

இந்த முறையிலும் முன்னர் பார்த்த அதே போன்ற வகைகள் உண்டு Normal inverted HnS, Raising inverted HnS, Sloping inverted HnS, இவைகளை பற்றி பார்ப்போம்

NORMAL INVERTED HNS

இது ஒரு மனிதனின் தலை மற்றும் தோள் பட்டைகளின் வடிவம் போல் தான் இருக்கும், இருந்தாலும் இது தலைகீழ் உருவம் போல் தோற்றம் அளிக்கும் ஆதலால் இதற்க்கு இந்த பெயர் ஏற்பட்டது, இதனை பொறுத்தவரை உயர்வுக்கான ஏற்பாடு என்று கொள்ளலாம், neckline உடைபட்டவுடன் தொடர் உயர்வுகள் ஏற்படத்தொடங்கும், மற்றபடி முன்னர் பார்த்த normal HnS ஐ போன்றது தான் இதுவும், புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை,

RAISING INVERTED HNS

இதுவும் raising HnS ஐ போன்றது தான் ஆனால் இது தொடர்ந்து உயர்வதற்கான வடிவம், மேலும் இந்த வடிவத்தில் break out பெற்றவுடன் buy செய்வதற்கு முன் அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாக உள்ளதா என்று பார்த்து பின்பு முடிவு எடுக்க வேண்டும், ஏனெனில் இதில் ஏமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் சற்று உண்டு, இது பொதுவில் ஒரு 120 to 150 என்ற டிகிரி கோணத்தில் chart படங்களில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்

SLOPING INVERTED HNS

இதுவும் sloping HnS ஐ போன்றது தான், ஆனால் இது தொடர்ந்து உயர்வதற்கான வடிவம், மேலும் இது சற்று இறங்கி சாய்வாக இருக்கும் மேலும் ஒரு 230 to 250 டிகிரி என்ற கோணத்தில் இந்த வடிவம் chart ல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், இந்த வடிவம் ஏற்பட்டு neckline உடைபட்டால் நல்ல உயர்வுகள் விரைவாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்,

இத்துடன் HEAD & SHOULDER என்ற வடிவத்தின் விளக்கங்கள் முடிந்தது, சரி கீழே உள்ள படங்களை பாருங்கள்

படங்கள்

PICTURE 1 NORMAL HEAD & SHOULDER

-----------

PICTURE 2 NORMAL RAISING HEAD & SHOULDER

--------

PICTURE 3 NORMAL SLOPING HEAD & SHOULDER

----------

PICTURE 4 INVERTED HEAD & SHOULDER

---------------

PICTURE 5 INVERTED RAISING HEAD & SHOULDER

-------------------

PICTURE 6 INVERTED SLOPING HEAD & SHOULDER


RIANGLE PATTERN

Chart படங்களில் முக்கோணம் போன்ற அமைப்புகள் உருவாகும் பொழுது ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம், பொதுவாக இது போன்ற அமைப்புகள் chart படங்களில் எந்த விதமான இடங்களிலும் ஏற்படலாம், அதாவது பங்குகளின் நகர்வுகளுக்கு முந்தய நிலையில் இருக்கும் வடிவங்களை Real Pattern என்றும், நகர்வுகளின் இடையே ஏற்படும் வடிவங்களை Consolidation Pattern என்றும் இரு வகைபடுத்தலாம்,

அந்த வகையில் இந்த Triangle என்ற வடிவம் மேற்கண்ட இரு இடங்களிலும் ஏற்படலாம், எந்த இடங்களில் ஏற்பட்டாலும் இந்த வடிவத்துக்கு அதிக பலம் என்பது மட்டும் நிச்சயம், உதாரணமாக நமது ஜாதக கட்டங்களில் நல்ல இடத்துக்கு உரிய கிரகங்கள் கேந்திர கோணங்களில் உச்சமாகும் போது ஏற்படும் பலம் இந்த அமைப்பிற்கு எப்பொழுதும் உண்டு,

மேலும் இந்த வடிவம் நமது chart படங்களில் எவளவு சிறியதாக இருந்தாலும் அதற்குரிய பலனை விரைவாக தரும் என்பது எனது அனுபவம், ஆனால் வடிவங்களின் break out புள்ளிகளை மிகச்சரியாக கண்டுபிடித்து செயலாற்ற வேண்டும், அப்பொழுது தான் சரியான வர்த்தகத்தை நாம் செயல்படுத்த முடியும்,

இன்னும் சொல்லபோனால் இந்த Triangle அமைப்பை பொறுத்தவரை அந்த கஷ்டம் கூட நமக்கு இருக்காது என்பதும் உண்மையே, இந்த அமைப்பை நாம் கண்டு கொள்வதும் எளிதானதே, மேலும் இந்த அமைப்பின் s/l கூட மிக அருகில் கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படும், மொத்தத்தில் இந்த வடிவம் அதிக பட்ச நம்பிக்கைக்கு உரிய! சற்று பாதுகாப்பு அதிகமான! இலக்குகளை துல்லியமாக கொடுக்கும் வடிவம் என்று சொன்னால் மிகையாகாது,

சரி இந்த வடிவத்தை பற்றி இன்னும் சில விசயங்களை பார்ப்போம்,அதாவது இந்த வடிவம் முக்கோண வடிவம் என்று சொன்னாலும், சொல்லி வைத்தார் போல் நமது மனதில் இருக்கும் முக்கோண வடிவத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று இல்லை, நாம் முன்னரே பார்த்தோம் இல்லையா அதாவது இயற்கையாக ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மாற்று கோணம் கொண்டு பார்ப்பதற்கும் அநேக வித்தியாசம் உண்டு என்று,

இதே போல் தான் chart படங்களில் ஏற்படும் வடிவங்கள் எப்பொழுது சொல்லி வைத்தார் போல் இருக்காது, அந்த வடிவங்களை கண்டு அதன் break outபுள்ளியை தேர்ந்தேடுப்பதற்க்குள் அநேக கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டி வரும், மேலும் இதனை சற்று எளிமைபடுத்திட! சற்று தெளிவுபடுத்திடகடந்த பாகங்களில் வித்தியாசமான படங்களை உங்களுக்கு கொடுத்து சிறு பயிற்ச்சியும் அளித்தோம், அந்த பயிற்சி இது போன்ற தருணங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்,

மேலும் எனது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொடர் பயிற்ச்சிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்புகள் முடிந்து மூன்று மாதத்திற்கு அடுத்த நாள் எந்த பங்குகள் உயரலாம், அந்த பங்குகள் உயர்வதற்கு என்ன விதமான வடிவங்கள் காரணமாக இருக்கிறது என்பதினை chart படங்களுடன் அனைவரது மின் அஞ்சலுக்கும் தினமும் மாலை அனுப்பி வைக்கின்றோம்,

இவ்வாறு செய்யும் போது நமது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களை அறியாமலேயே இந்த chart படங்களில் இந்த வடிவம் ஏற்படுகிறது என்ற எண்ணமும், ஒரு chart படத்தை பார்க்கும் போது இதில் இந்த வடிவம் புதைந்துள்ளது என்ற பயிற்ச்சியும் அனிச்சை செயலாக வந்துவிடும், இதற்காக தான் இந்த பயிற்ச்சியை நாங்கள் அளிக்கின்றோம்,இந்த பதிவுகளை படிப்பவர்கள் இது மாதிரியான பயிற்ச்சியை மேற்கொள்வது முக்கியம், சித்திரமும் கைபழக்கம் என்ற பழமொழி இதற்க்கு சால பொருந்தும்,

ஆகவே பயிற்சி செய்யுங்கள், சரி இந்த முக்கோண வடிவம் பல வகைகளில் ஏற்படும்

அதாவது

எப்பொழுதும் போல் உள்ள முக்கோணம்,

சற்று சாய்ந்து கீழே நோக்கி நிற்கும் முக்கோணம்,

சற்று உயர்ந்து மேல் நோக்கி நிற்கும் முக்கோணம்,

அனைத்திற்கும் மேலாக ஒரு மாதிரி இது முக்கோணமா இல்லை வேறு ஏதுமா என்ற என்னத்தை கொடுக்கும் முக்கோணம்

என்று வகைபடுத்தலாம், எது எப்படி ஆனாலும், அப்படி இப்படி என்று இருந்தாலும் பரவாயில்லை முக்கோணத்தின் சற்றேறக்குறைய உருவங்கள் வந்து விட்டாலே அது முக்கோணம் தான் break out கிடைத்தவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான், போதிய பயிற்சி ஏற்பட்டவுடன் உங்களுக்கு எளிமையாக புரிந்துவிடும் கவலைபடாதீர்கள்,

இவைகளை எல்லாம் எனது அநுபவத்தி நான் கண்ட உண்மைகள், பங்கு சந்தைகளில் ஏட்டு சுரைக்காய் என்றும் உதவாது, ஆகவே நான் இங்கு உங்களுக்கு தருவதெல்லாம் எனது அனுபவங்கள், அதிலும் வெற்றிகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அனுபவங்கள், ஆகவே சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், இலவசமாக கிடைப்பதால் மேம்போக்காக சென்று விடாதீர்கள், என்னால் முடிந்த வரை எவளவு எளிமைபடுத்தி தர முடியுமோ அவளவு எளிமைபடுத்தி தந்துள்ளேன், ஆகவே கவனமாகவே படியுங்கள்,

சரி இந்த முக்கோணத்தின் இலக்குகளை நாம் எப்படி கண்டறிவது,பொதுவாக முக்கோண அமைப்பின் உயரம் தான் அந்த அமைப்பு break outபெறும்போது அதன் இலக்காக இருக்கும், இதன் s/l ஆக அந்த முக்கோணத்தின் support கோடு எந்த புள்ளியில் வருகிறது அந்த புள்ளி s/l ஆக செயல் படும்,

சரி இந்த அமைப்பின் படங்களை பாருங்கள்


Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம், Channel என்பது Train தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த channel என்ற அமைப்பின் இடைப்பட்ட பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,


இவ்வாறு நகர்ந்து வரும் போது சேனல் அமைப்பின் Tops எனப்படும் உயரங்களில் தடைகளை சந்தித்து கீழே வந்து, மறுபடியும் சேனல் அமைப்பின் bottom எனப்படும் support பகுதிகளில் தங்கி மறுபடியும் உயர ஆரம்பிக்கும் இவ்வாறு சேனல் அமைப்பின் top பகுதிகளில் தடை எடுத்து கீழே வந்து bottom பகுதிகளில் support எடுத்து மறுபடியும் உயரும் இந்த இடப்பட்ட பகுதிகள் சரியான நேர்கோட்டில் இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த வடிவத்தை நாம் பார்க்கும் போது தண்டவாளத்தின் ஒழுங்கு நன்றாக தெரியும்,

இந்த இடைப்பட்ட பகுதிகளில் எத்தினை முறை வேண்டுமானாலும் நகர்ந்து செல்லலாம், ஆனால் என்று இந்த சேனல் அமைப்பு break out என்ற முறையில் உடைபடுகிறதோ அங்கிருந்து நகர ஆரம்பிக்கும், இவ்வாறு நகர வேண்டிய இலக்குகள் கீழ் நோக்கியதாக இருக்கலாம் அல்லது மேல் நோக்கியதாக இருக்கலாம், எப்படி நகர்ந்தாலும் இந்த அமைப்பின் படி அதன் இலக்கு ஒரே அளவாக தான் இருக்கும்,

அதாவது இந்த சேனல் அமைப்பின்படி கிடைக்கும் இலக்கு இரண்டு பக்கங்களுக்கும் ஒன்றாக தான் இருக்கும், இதன் இலக்குகள் இந்த சேனல் அமைப்பின் இரண்டு புள்ளிகளுக்கும் இடைப்பட்ட உயரமாக இருக்கும், அதே நேரம் இந்த அமைப்பின் படி s/l ஆக நாம் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்! அதாவது உயர்வதற்காக Channel Pattern break out பெற்றால் இதன் s/l ஆக நாம் அந்த சேனல் அமைப்பின் bottom support புள்ளியை தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும் ,

அதே நேரம் இந்த channel அமைப்பிற்குள் ஏற்படும் வேறு ஏதாவது சின்ன சின்ன அமைப்புகளையும், Tend line support களையும், Fibonacci அளவுகளையும் பயன்படுத்தி நமது s/l ஐ சற்று முன்னரே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு, இவ்வாறு கண்டு பிடிக்க சற்று பயிற்சி தேவை, அந்த பயிற்சி ஏற்பட்டவுடன் இயல்பாக நாம் அதை தேட ஆரம்பித்து விடுவோம்,

பொதுவாக இந்த சேனல் அமைப்பிற்குள் ஒரு பங்கு நகர ஆரம்பித்தால் நாம் அதன் support புள்ளிகளின் அருகே வாங்கி தடை புள்ளிகளான உயரங்களில் விற்று வர்த்தகம் செய்யலாம், அதாவது channel bottom இல் வாங்கி channel top வரும் போது விற்பது என்று வர்த்தகம் செய்யலாம், இப்படி செய்தால் நமது s/l மிக அருகிலே இருக்கும், பெரிய இழப்புகள் ஏதும் இருக்காது,

அதாவது ஒரு பங்கு 100 என்ற புள்ளியை சேனல் support (Bottom) ஆகவும் 135 என்ற புள்ளியை சேனல் தடையாகவும் (Top) பெற்று இருந்தால், நமது வர்த்தகம் 100 to 102 என்ற புள்ளி வரும் போது buying செய்து 135 என்ற புள்ளி வரும் போது விற்க வேண்டும், ஒரு வேலை நீங்கள் வாங்காமல் அந்த பங்கை 133 to 135 என்ற புள்ளிகளில் இருக்கும் போது கவனிக்க நேரிட்டால் இந்த புள்ளியின் அருகே விற்று மறுபடியும் 100 என்ற புள்ளி கீழே வரும் போது வாங்கிக்கொள்ளலாம்,

இது போன்று நீங்கள் செய்வதால் உங்களின் s/l மிக அருகிலேயே இருக்கும் அதாவது 135 என்ற புள்ளி சேனல் தடை புள்ளியாக இருப்பதால் இந்த புள்ளியை மேலே கடந்தால் அது தொடர்ந்து ஏற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும், ஆகவே நீங்கள் 134 to 135 என்ற புள்ளியின் அருகே விற்றால் உங்களின் s/l 135, அப்படி 135 என்ற புள்ளியை உடைத்து மேலே சென்றால் நீங்கள் 135 என்ற புள்ளியை s/l ஆக வைத்து இருப்பதால் உங்களின் நட்டம் வெறும் 1 to 2 ரூபாயாக தான் இருக்கும், மேலும் இந்த புள்ளியை உடைத்து இருப்பதால் தொடர்ந்து ஏறும் வாய்ப்புகளும் இருப்பதால் உடனே நீங்கள் buying செய்யலாம் புரிகிறதா!

ஆகவே சேனல் அமைப்புகளில் இது போன்று வர்த்தகம் செய்யும் சாத்தியங்கள் இருப்பதால் இதனை நன்றாக பயன்படுத்தலாம், அப்படி இல்லை இது எனக்கு கஷ்டமாக உள்ளது என்றால் இந்த சேனல் அமைப்பு எப்பொழுது உடைபடுகிறதோ அப்பொழுது வரை பொறுத்து இருக்கலாம்,,,

சரி இந்த சேனல் அமைப்பை பொறுத்தவரை மூன்று விதங்களில் நமது chart படங்களில் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு, அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம், அதாவது முன்னர் நாம் Head & Shoulder என்ற அமைப்பில் பார்த்தோம் இல்லையா அதே போன்ற வகையில் தான் இந்த சேனல் அமைப்பும் இருக்கும், அதாவது Normal Channel Pattern, Raising Channel Pattern, Sloping Channel Pattern என்ற இந்த மூன்று விதங்களில் ஏற்படும், இவை ஒவ்வொன்றுக்கும் நாம் ஒவ்வொரு மாதிரி செயல்பட வேண்டும், அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் ,

NORMAL CHANNEL PATTERN

இந்த அமைப்பை பொறுத்த வரை நாம் இதற்க்கு முந்தய பத்தியில் படித்தது போலவே செயல்பட வேண்டும், அதாவது கீழே வரும் போது வாங்கி மேலே சென்ற பின் விற்பது, மேலும் மேலே விற்று கீழே வந்த பின்பு வாங்குவது, பிறகு எந்த பக்கம் break out பெறுகிறதோ அந்த திசையில் நமது வர்த்தக பாதைகளை மேற்கொள்வது, இதற்க்கான s/l நாம் முன்னர் பார்த்த விதங்களில் எடுத்துக்கொள்வது, அவளவு தான் விஷயம்! சரி இதற்கான படத்தை பாருங்கள்



RAISING CHANNEL PATTERN

இந்த Raising Channel Pattern ஐ பொறுத்த வரை இதன் வடிவம் நாம் முன்னர் சொன்னது போல தண்டபாலத்தை போல தான் இருக்கும், அதே நேரம் சற்று செங்குத்தாக இருக்கும், இதனை பொறுத்த வரை உயரங்களில் விற்று கீழே வரும் போது வாங்கலாம் என்பதும், கீழே வந்த பின் வாங்கி உயரங்களில் விற்கலாம் என்பதும் அநேகம் தடவை யோசித்து செயல்பட வேண்டிய விசயமாகும்! ஏனெனில் ஏமாற்றும் வாய்ப்புகள் உள்ளது,

செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்கும் கயிற்றில், ஏறுவதில் இருக்கும் சிக்கல் சற்று அதிகம், விழுந்தால் ஏதும் மிஞ்சாது, அதே நேரம் இந்த அமைப்பில் buying செய்வதற்கான break out கிடைத்தாலும் கொஞ்சம் யோசித்து அநேக சாத்தியக்கூறுகளும் சாதகமாக உள்ளதா என்று பார்த்து வர்த்தகம் செய்வது பாதுகாப்பானது,

அதற்காக வர்த்தகம் செய்யவே வேண்டாம் என்று சொல்ல வில்லை பாது காப்பை பலப்படுத்தி களத்தில் இறங்குவது வெற்றிக்கான முதல் செயல், அதே நேரம் இந்த அமைப்பில் selling செய்வதற்கான break out கிடைத்தால் தைரியமாக ஈடுபடலாம் விரைவான லாபங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இந்த அமைப்பிற்கு அதிகம், இதன் இலக்குகள் மற்றும் s/l எல்லாம் நாம் முன்னர் பார்த்தது போலவே தான், சரி இந்த படத்தை பாருங்கள்

SLOPING CHANNEL PATTERN

Sloping Channel Pattern ஐ பொறுத்தவரை அப்படியே Raising Channel Pattern க்கு எதிர் பதமானது, இந்த அமைப்பு சற்று கீழ் நோக்கியது போல் காட்ச்சியளிக்கும், ஆனால் சரியான அளவுகளுடன் சேனல் என்ற வடிவத்தில் தான் இருக்கும், இந்த அமைப்பை பொறுத்தவரை selling செய்வதற்கு break out கிடைத்தால் சற்று யோசித்து! அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாக இருக்கின்றதா என்று பார்த்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் , அதே நேரம் buying செய்வதற்கான break out கிடைத்தால் நன்றாக தைரியமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம், முன்னர் சொன்னது போலவே இதன் இலக்குகளை கண்டு பிடிப்பதும் s/l ஐ கண்டு பிடிப்பதும் ஒரே முறை தான்,

பொதுவாக Raising Channel மற்றும் Sloping Channel ஆகிய இரண்டிலும் உயரங்களில் விற்று, bottom புள்ளிகளில் வாங்கியும் bottom புள்ளிகளில் வாங்கி உயரங்களில் விற்பதையும் தவிர்ப்பதினால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாம், இது ஒரு பாதுகாப்பிற்க்காக தான் சொல்கிறேனே தவிர நல்ல பயிற்சி ஏற்பட்ட பின்பு எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம், அதே நேரம் Normal Channel அமைப்பில் நாம் முன்னர் பார்த்தது போல எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம்,, சரி இந்த படத்தையும் பாருங்கள்,


இன்னும் ஒரு சில பதிவுகளில் நமது பயில்வோம் பங்கு சந்தை தொடர் நிறைவு பெரும் என்று நினைக்கின்றேன்

இந்தத் தொடரை எழுதி வரும் சரவணபாலாஜி அவர்களின் வலைப்பதிவில் தினசரி பங்குச் சந்தைகளின் நகர்வுகள் குறித்து எழுதி வருகின்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக