moving average பற்றி பார்த்து கொண்டு இருந்தோம், மேலும் இதில் பயன்படுத்தப்படும் கால அளவுகளை பற்றியும் பார்த்து வந்தோம், சரி அது போன்று பயன்படுத்தப்படும் கால அளவுகளின் கோடுகளை நாம் charting s/w ல் பயன்படுத்தும் போது, இந்த கோடுகளை வைத்து முக்கியமான சில முடிவுகளை நாம் வர்த்தகத்திற்கு சாதகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன் இல்லையா, அதை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,
உதாரணமாக நாம் கால அளவுகளில் 4, 9, 18, 50, 200, போன்ற நாட்களின் moving average களை பயன் படுத்துகிறோம் என்றும் சொல்லி இருந்தேன் இல்லையா, இந்த நாட்களின் moving average கோடுகளானது, வருசயாக ஒரு பங்கின் chart படங்களில் இருக்கும், இப்படி இருக்கும் போது இந்த கோடுகள் பங்குகளின் நகர்வுகளுக்கு தகுந்தாற் போல் மேலும் கீழும் ஏறி இறங்கி நகர்ந்து கொண்டே இருக்கும், இவ்வாறு நகரும் போது இந்த கோடுகள் ஒரு சில இடங்களில் ஒரு சில விளைவுகள் தரும் அது போன்ற விளைவுகள் என்ன என்ன என்று பார்ப்போம்,
அதாவது ஒரு பங்கு மேலிருந்து கீழே வரும் போது அந்த பங்கின் moving average கோடுகளானது, முதலில் நான்கு நாள் moving average கோடும், அதற்க்கு கீழ் ஒன்பது நாள் moving average கோடும், அதற்கும் கீழ் 18 நாள் moving average கோடும், அதற்கும் கீழ் 50 நாள் moving average கோடும் அதற்கும் கீழ் 200 நாள் moving average கோடும், அமைந்து இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த கோடுகள் ஒவ்வொன்றும் அந்த பங்கு கீழே வரும் போது support இடங்களாக செயல்படும், இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக 18, 50, 200 ஆகிய நாட்களுக்கான moving average கள் செயல்படும்,
ஏனெனில் அந்த குறிப்பிட்ட பங்கின் 18 நாட்களுக்கான சராசரி closing விலை என்பது அந்த கொடு உள்ள புள்ளியாகும், அப்படி பார்க்கும் போது 18 நாட்களாக அந்த பங்கு தனது closing விலையை கடந்து கீழே வருவது சற்று சிரமம், அதாவது 18 நாட்களாக கட்டி காப்பாத்திய விலை சரிந்து போவது அவளவு எளிதல்ல அல்லவா, அப்படி அந்த புள்ளியையும் கீழே கடந்து வருமானால் அந்த பங்கு தனது சக்தியை இழந்து வருகிறது என்று தானே அர்த்தம், ஆகவே தான் இறங்கும் போது இந்த 18 நாள் moving average முக்கியமான support ஆக செயல்படும்,
இந்த கோட்டையும் கீழே கடந்தால் அடுத்த முக்கியமான support என்று 50 நாள் moving average கோட்டை சொல்லலாம், அடுத்து 200 நாள் moving average இப்படி இந்த மூன்று கோடுகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த support புள்ளிகளாக செயல்படும், ஆகவே இந்த புள்ளிகளின் அருகில் பங்குகள் வரும் போது சந்தை துணை நிற்கும் சூழ்நிலை வந்தால், இந்த கோடு தொட்டு நிற்கும் புள்ளிகளில் இருந்து உயரும் வாய்ப்புகளை அந்த பங்கு பெரும்,
அதே போல் கீழிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு மேலே வரும் போது இதே நாட்களின் கோடுகள் தடை புள்ளிகளாக செயல்படும், அதே போல் மேலும் சில விசயங்கள நாம் பார்க்கலாம் அதாவது மேலே குறிப்பிட்ட moving average களின் கோடுகள் எல்லாம் ஒரே புள்ளியில் ஒன்று சேரும் போதும், ஒன்று சேர்ந்து பிரியும் போது சில முக்கியத்துவம் நிறைந்த நிகழ்ச்சிகள் அந்த குறிப்பிட்ட பங்குகளில் நடைபெறும், அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது நமக்கு நல்ல லாபங்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும், அது போன்ற நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்,
உதாரணமாக மேலே குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கான moving average கோடுகளும் chart படத்தில் ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து, அந்த அனைத்து கோடுகளையும் அந்த பங்கின் விலை மேலே தாண்டி செல்லும் போது, அதன் நகர்வுகள் இன்னும் அதிகமாக மேலே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம், இதற்க்கு வேறு சில உருவ அமைப்புகளின் break out உம் நமக்கு கிடைத்து இருந்தால், இதனை நன்றாக உறுதி செய்து நாம் அந்த பங்கினை வாங்கலாம்,
மேலும் அடுத்து இந்த கோடுகளில் 18, 50, என்ற கோடுகளை கீழே கடந்தால் லாபங்கள் போதும் என்று விற்று விட்டு வந்து விடலாம், அல்லது அதற்க்கு முன்னர் கூட நீங்கள் விற்று விட்டு வரலாம், அதே போல் இந்த ஐந்து கோடுகளும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அந்த பங்கின் விலை புள்ளியானது இந்த கோடுகளை எல்லாம் கீழே கடந்து செல்லும்படி நேர்ந்தால், தொடர்ந்து இறக்கம் இருக்கும் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம், இதற்க்கு moving average convergence and divergence என்று பெயர், இப்படியாக இந்த moving average கோடுகள் நமக்கு அநேக விசயங்களை சொல்லும், இப்படி முக்கியத்துவம் நிறைந்த moving average களின் படங்களை பாருங்கள்,
MOVING AVERAGE PICTURE 1:
RSI
RSI என்பது ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளின் சக்தியை தீர்மானிக்கும் குறியீடாகும், அதாவது இந்த குறியீடானது பெண்டுலம் போல் மேலும் கீழும் ஏறி இறங்கி வருவது ஆகும், இதன் துணை கொண்டு நாம் அந்த பங்கு தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கும் திசையில் தொடர்ந்து நகருமா! என்பதினை ஓரளவிற்கு தீர்மானிக்கலாம்,
அதாவது இந்த குறியீடானது 0 (பூஜ்ஜியம் முதல் நுறு வரை) முதல் 100 வரை மேலும் கீழும் ஆடி ஒரு குறிப்பிட்ட எண்களை மேலே கடந்து தொடர்ந்து சென்றால், அந்த பங்கு தொடர்ந்து உயரும் என்றும், அதே போல் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து கீழே வந்தால், வீழ்ச்சிகள் ஏற்படலாம் என்றும் ஓரளவிற்கு நாம் அனுமானத்திர்க்கு வரலாம்,
அதன் படி இந்த RSI என்ற INDICATOR 30 என்ற புள்ளியை கீழிருந்து மேல் நோக்கி கடந்து தொடர்ந்து உயருமானால், அந்த குறிப்பிட்ட பங்கானது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும் என்று வைத்து கொள்ளலாம், (இந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் வைத்து நாம் 100% சரியான முடிவுக்கு வர முடியாது), அதே போல் தொடர்ந்து உயர்ந்து மேலிருந்து கீழாக 70 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால், இந்த பங்கில் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம் என்று எடுத்துக்கொள்ளலாம்,
இப்படியாக அந்த பங்கின் நகர்வின் சக்தியை நமக்கு உணர்த்தும் INDICATOR ஆக இந்த RSI செயல்படும், மேலும் இந்த RSI இல் இரண்டு விஷயங்கள் உள்ளது, அதையும் பார்த்து விடுவோம், அதாவது இதில் POSITIVE DIVERGENCE, மற்றும் NEGATIVE DIVERGENCE என்று இரண்டு விஷயங்கள் உள்ளது இதனை பற்றியும் பார்ப்போம் ,,,
POSITIVE DIVERGENCE:
POSITIVE DIVERGENCE என்பது! இந்த RSI INDICATOR மேலே உயர்ந்து இதனை ஒட்டி இந்த RSI க்கு உரிய பங்கின் விலை சற்று கீழ் நோக்கி நகர்ந்தாலோ, அல்லது நகராமல் ஒரு குறிப்பிட்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையே மட்டும் நகர்ந்தாலோ, அல்லது நகர்வின் வேகம் குறைவாக இருந்து VOLUME அதிகமானாலோ, இந்த பங்கு விரைவில் உயர போகிறது என்று அர்த்தம் கொள்ளலாம் அதன் படி வாங்கவும் செய்யலாம், இவ்வாறு இருப்பது POSSITIVE DIVERGENCE ஆகும் , அதாவது RSI உயர்ந்து பங்கின் விலை உயராமல் இருப்பது, அப்படி இருந்தால் விலை விரைவில் உயரும் என்று கொண்டு வாங்கலாம்,,,
NEGATIVE DIVERGENCE:
NEGATIVE DIVERGENCE என்பது RSI INDICATOR DOUBLE TOP, அல்லது வேறு ஏதேனும் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அருகில் இருந்து, அல்லது RSI அதிகப்படியான உயரத்தில் இருந்து, அல்லது RSI உயராமல் இருந்து, பங்கின் விலை மட்டும் நன்றாக VOLUME இல்லாமல் உயருமானால், இந்த பங்கில் தொடர்ந்து உயரும் சக்தி குறைந்து வருவதாகவோ, அல்லது சக்தி இல்லை என்று அர்த்தமாகி விரைவில் கீழே வரப்போகிறது என்று கொள்ளலாம், இவ்வாறு ஏற்படின் இந்த பங்கில் இருந்து வெளியே வந்து விடுவதும், அல்லது புதிதாக வாங்காமல் இருப்பதும் நல்லது,
RSI PICTURE
இப்படியாக பங்கின் விலையிலும் RSI யின் நகர்விலும் வித்தியாசங்கள் இருப்பது NEGATIVE DIVERGENCE ஆகும்
MACD என்பது Moving Average Convergence and Divergence என்று அழைக்கப்படும், இந்த Indicator ஐ வைத்து நாம் ஒரு பங்கை எந்த புள்ளியில் வாங்கலாம், எந்த புள்ளியில் விற்கலாம் என்ற முடிவுக்கு வரலாம், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த indicator இல் இரண்டு கோடுகள் மேலும் கீழும் சென்று வரும், இதில் ஒரு கோடு MACD என்று அழைக்கப்படும் மற்றொன்று நாம் முன்னர் பார்த்த EXPONENTIAL MOVING AVERAGE கோடு ஆகும் இந்த EMA கோடானது 9 என்ற நாட்களின் அளவை கொண்ட EMA ஆகும்,
சரி இந்த indicator ஐ எப்படி நாம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன், அதாவது இந்த இரண்டு கோட்டில் MACD என்ற கோடு "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை நாம் வாங்கலாம், அதே போல் இந்த MACD கோடானது "0" என்ற புள்ளியை கீழே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை விற்கலாம், இவ்வாறு நாம் இந்த indicator ஐ பயன்படுத்தி வர்த்தக முடிவுகளை எடுக்கலாம், (வெறும் இந்த indicator ஐ மட்டும் வைத்து 100% சரியான முடிவுக்கு வரமுடியாது, இதனுடன் நமது Technical Analysis அறிவையும் சேர்த்து தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்),
அதே நேரம் இதில் மற்றொரு EMA 9 என்ற கோடும் உள்ளது என்று பார்த்தோம் இல்லையா, இந்த இரண்டு கோடுகளும் (EMA, MACD) ஒன்றுக்கொன்று cross ஆவதை வைத்தும் நாம் Buying மற்றும் Selling முடிவுகளையும் எடுக்கலாம், அதாவது இந்த MACD என்ற கோடு EMA 9 என்ற கோட்டை மேலே கடந்தால் அது முதல் Buying Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அது இரண்டாவது Buying Signal ஆகும்,
இப்படி ஏற்பட்டு Technical ஆக சில வடிவங்கள் break out என்ற நிலையை பெற்று நல்ல volume நடக்குமானால்! நன்றாக அந்த பங்கை வாங்கலாம், அதே போல் இந்த MACD என்ற கோடு EMA 9 என்ற கோட்டை கீழே கடந்தால் அது முதல் Selling Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு "0" என்ற புள்ளியை கீழே கடந்தால் அது இரண்டாவது Selling Signal ஆகும், இதற்க்கு பின் முன்னர் பார்த்த விஷயங்கள் யாவும் தொடர்ந்து நடந்தால் Selling செய்யலாம், இப்படியாக இந்த indicator நாம் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம்,
சரி இந்த MACD என்று கோடு எப்படி வந்தது என்றும் பார்த்து விடுவோம், அதாவது இரண்டு அளவுள்ள Moving Average கோடுகள் ஒன்றுடன் ஒன்று Cross ஆகும் போது, ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தும் ஒரு Indicator ஆகும், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் முன்னர் பார்த்த EMA (EXPONENTIAL MOVING AVERAGE) களில் 26 என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும், 12 என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும் எடுத்து, இதில் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை மேலே கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை மேலே கடக்கும், அதே போல் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை கீழே கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை கீழே கடக்கும்,
ஆகவே இந்த 12 EMA மற்றும் 26 EMA என்ற இரண்டு கோடுகளும் ஒன்றுக்கொன்று தங்களை Cross செய்வதை வெளிப்படுத்தும் விதமாக இந்த MACD என்ற indicator செயல்படுகிறது, இதில் இந்த 12 EMA, 26 EMA என்ற அளவுகளுக்கு பதில் வேறு சில எண்களை போட்டு! அதன் விளைவுகள் சரியாக இருந்தால்! அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், அது உங்களின் ஆராய்ச்சியையும் அனுபவத்தையும் பொறுத்தது ,,, சரி MACD யின் படத்தை பாருங்கள்
MACD Picture:
ADX
ADX என்பது Averages Direction Movement Index என்று அழைக்கப்படும், இந்த ADX indicator வெறும் Buying, மற்றும் selling signal மட்டும் தராமல் அந்த குறிப்பிட்ட Trend இன் சக்தியையும் நமக்கு வெளிப்படுத்துகிறது , சரி இதை பற்றி விளக்கமாக பார்ப்போம், இந்த ADX Indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும், இந்த கோடுகளை வைத்து தான் நாம் நமது buy அல்லது sell முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்,
அதாவது இந்த ADX எனப்படும் மொத்த indicator இல் “ D+ ” மற்றும் “ D - “ என்ற indicator கோடுகளும், ADX எனப்படும் மற்றுமொரு supporting tool கோடும் இருக்கும் , (இதை indicator என்று சொல்வதைவிட Catalyst! அதாவது வினை ஊக்கி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்), இந்த மூன்று கோடுகள் தங்களுக்குள் நகர்ந்து கொள்வதை வைத்து தான்! நாம் நமது buying மற்றும் selling முடிவுகளை எடுக்க வேண்டும்,
ADX
கடந்த வாரம் ADX என்ற indicator ஐ பற்றி பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, இப்பொழுது முழுமையாக அதைபற்றி பார்ப்போம், adx என்ற indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும் என்றும் அதில் இரண்டு கோடுகள் முறையே D+, D-, என்றும், மற்றது ADX என்ற வினை ஊக்கி என்றும் பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, சரி இப்பொழுது இந்த மூணு கோடுகளையும் பயன் படுத்தி எப்படி நமது வர்த்தகத்தை சரியாக செய்யலாம் என்று பார்ப்போம்,
இந்த adx என்ற கோடானது ஒரு குறிப்பிட்ட பங்கில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ உறுதிபடுத்தும் ஒரு கோடாகும், அதாவது D+ என்ற கோடானது D- என்ற கோட்டை மேலே கடந்து செல்லும் பட்சத்தில் அந்த பங்கை நாம் வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதே நேரம் இந்த D+ கோடானது மேலே தொடர்ந்து உயரும், இதற்க்கு எதிராக D- என்ற கோடு கீழே வரும், இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இந்த D+ என்ற கோட்டை தொடர்ந்து, மேலே சொன்ன ADX என்ற கோடும் உயரே செல்லும்! இப்படி சென்றால் அந்த buying trend நல்ல சக்தியுடன் செல்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்,
அதே போல் இந்த D+ என்ற கோடு D- என்ற கோட்டை கீழே கடந்து சென்றால் நாம் அந்த பங்கை விற்று வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதாவது அந்த பங்கு தொடர்ந்து கீழே வர இருக்கிறது என்று அர்த்தம், இப்படி நடக்கும் போது D- என்ற கோடு மேலே உயரும், இதற்க்கு எதிராக D+ என்ற கோடு கீழே வந்து கொண்டிருக்கும், இந்த நேரத்தில் adx என்ற கோடும் d- என்ற கோட்டினை தொடர்ந்து மேலே உயருமானால் அந்த பங்கின் இறங்கும் trend நல்ல சக்தியுடன் இருப்பதாக நாம் கொள்ளலாம்,
இது போல் மேலே குறிப்பிட்ட கோடுகள் ஏறி இறங்குவதற்கு சில புள்ளிகளை அதன் குறியீடாக கொள்ளலாம், அதாவது இந்த adx கோடானது எந்த புள்ளியை மேலே கடந்து சென்றால் நல்ல உயர்வு அல்லது வீழ்ச்சி என்று சொல்லலாம் என்பதினை பற்றிய விஷயம், அதாவது இந்த adx என்ற கோடானது 20 மற்றும் 40 என்ற இரண்டு புள்ளிகளையும் முக்கியமான அளவுகளாக கொண்டு நகரும் (சிலர் 30 என்ற புள்ளியை கடந்தால் என்றும் சொல்கிறார்கள்),
அதாவது d+ என்ற கோடு d- என்ற கோட்டை மேலே கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இதனை தொடர்ந்து இந்த adx என்ற கோடும் கீழே இருந்து உயர்ந்து வந்து 20 என்ற புள்ளியை கடந்து மேலே செல்கிறது என்றால், அந்த trend சக்தி மிக்கதாக கொள்ளலாம், பிறகு adx கோடு 40 என்ற புள்ளியையும் மேலே கடந்து சென்றால் அந்த trend இன் சக்தி இன்னும் அதிகம் என்று கொள்ளலாம், அதற்க்கு அடுத்து 50 என்ற புள்ளிக்கு மேல் அதிகமான சக்தி என்று கொள்ளவேண்டும்,
அதே போல் இந்த adx கோடானது மேலே இருந்து கீழ் நோக்கி இறங்கி வந்து 40 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால் சக்தி குறைந்து விட்டது என்று கொள்ள வேண்டும், பிறகு 20 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் சுத்தமாக சக்தி குறையும் வாய்ப்புகள் உருவாகலாம் என்றும், புதிய trend ஏற்பட இருக்கிறது என்றும் கொள்ள வேண்டும், மேலும் இந்த adx என்ற கோடு மேலே இருந்து கீழே வரும் சமயங்களில் நடந்து கொண்டிருக்கும் trend சற்று மந்தமாக, அதிகப்படியான நகர்வுகள் இல்லாமல் இருக்கும், அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும், சரி இந்த adx இன் படத்தை பாருங்கள்
ADX PICTURE 1
PARABOLIC SAR
PARABOLIC SAR என்பது ஒரு முக்கியமான INDICATOR ஆகும், முக்கியமாக தின வர்த்தகர்களுக்கு பயன்படக்கூடியது, இதை பற்றி சொல்லவேண்டும் என்றால், இந்த PARABOLIC SAR INDICATOR புள்ளியை ஒரு பங்கின் விலை கீழே கடந்தால் விற்கலாம் என்றும், இந்த புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம் என்றும், அர்த்தம் கொள்ளும் அளவுக்கு BUYING மற்றும் SELLING SIGNAL களை தரும் INDICATOR என்று கூட சொல்லலாம்,
அதாவது இந்த PARABOLIC SAR என்ற INDICATOR, பங்குகளின் CHART படங்களின் ஊடே நகர்ந்து கொண்டிருக்கும் புள்ளிகளாகும், இந்த புள்ளிகள் பங்குகளின் CHART படங்களுக்கு மேலேயும் கீழேயும் அமைந்து வந்து கொண்டே இருக்கும், அதன் படி தற்பொழுது அருகில் இருக்கும் புள்ளியை பங்கின் விலை கீழே கடந்தால் SELL, அதே போல் மேலே உள்ள புள்ளியை பங்கின் விலை மேலே கடந்தால் BUY, இப்படியாக இந்த INDICATOR BUYING மற்றும் SELLING SIGNAL களை தருகிறது அதனால் தான் இந்த INDICATOR க்கு PARABOLIC STOP AND REVERSAL (SAR) என்று பெயர்,
இதன் படி நாம் அப்படியே செயல்படாமல் வேறு சில விசயங்களையும் கையாண்டால் மிகச்சரியான வர்த்தக முடிவுகளை இந்த INDICATOR ஐ பயன்படுத்தி நாம் எடுக்கலாம், அதாவது இந்த PARABOLIC SAR புள்ளியை ஒரு பங்கின் விலை ஒரு மணி நேர தின வர்த்தக CHART இல் மேலேயோ அல்லது கீழேயோ கடந்தவுடன், அடுத்து அந்த இடத்தில் இருக்கும் TOPS மற்றும் TREND LINE RESISTANCE, மற்றும் FIBONACCI அளவுகள் மற்றும் PATTERNS போன்ற விசயங்களை எல்லாம் சரி பார்த்து உங்கள் வர்த்தகத்தை தொடங்கினால் கண்டிப்பான லாபம் கிடைக்கும், இந்த INDICATOR தின வர்த்தகத்திற்கு மிக உதவியாக இருக்கும் , PARABOLIC SAR இன் படத்தை பாருங்கள்
PARABOLIC SAR PICTURE 2
இதுவரை பயில்வோம் பங்குசந்தையில் அநேக விசயங்களை பார்த்து வந்தோம், முக்கியமாக open, high, low, close என்பதினை பற்றியும் அதில் இருந்து எப்படி ஒரு candlestick bar உருவாகிறது என்பதினை பற்றியும், பிறகு இவ்வாறு உருவாகும் ஒரு தனிப்பட்ட மற்றும் இரண்டு மூன்று candle களின் வடிவத்தை வைத்து எப்படி அதன் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம் என்றும் பார்த்து வந்தோம், மேலும் இது போன்று சந்தையின் அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க பேருதவியாக இருக்கும் Indicator களை பற்றியும் பார்த்து வந்தோம், தற்பொழுது இவ்வாறு உருவாகும் candle களின் தொகுப்பை பயன்படுத்தி எப்படி ஒரு பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினை பார்ப்போம், அதற்க்கு முன் தினமும் சந்தையில் வர்த்தகத்தில் உருவாகும் இந்த ஒவ்வொரு நாள் candle களின் தொகுப்பை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,
உதாரணமாக நாம் Technical Analysis ல் பயன்படுத்தும் இந்த வரைபடங்களில் இருக்கும் candle களின் தொகுப்புகள் ஒன்றாக சேர்ந்து நமக்கு சில உருவங்களை ஞாபகப்படுத்தும், அப்படி ஞாபகப்படுத்தும் இந்த உருவங்களை வைத்து தான் நாம் அந்த பங்கில் வர்த்தகம் செய்வதை முடிவு வேண்டி இருக்கும் ,
இது போன்ற வடிவங்கள் தோன்றினால் இன்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று யாரும் எழுதி வைக்கவில்லை, ஆனால் இயற்கையாகவே இது போன்ற வடிவங்கள் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரைபடங்களில் அமைந்து கொண்டு இருந்தது, இப்படியாக அமைந்து வந்த அந்த வடிவங்களை அந்த பங்குகளின் விலைகள் மேலேயோ அல்லது கீழேயோ கடந்து செல்லும் போது முக்கியமாக குறிப்பிடும் படியான விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருந்தது,
இப்படி எல்லாம் ஏற்படும் விளைவுகளை மறு முறை மறு முறை சோதனை செய்து, எப்பொழுது எல்லாம் இது போன்ற உருவங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இதே விளைவுகள் வருவதை கண்டறிந்து நமக்கு அறிவித்தனர், ஆகவே பங்கு சந்தையில் பங்குகளின் உயர்வுகள் தாழ்வுகள் நடப்பது இயற்கையே என்பதினை மனதில் வைத்து, இது போன்று நடப்பது இயற்கையாகவே நடந்த ஒன்று என்றும், யாரும் உக்கார்ந்து இதற்க்கான Rules & Regulation ஐ எழுதி நமக்கு தரவில்லை என்பதினையும் , சந்தையில் இயற்கையாக நடப்பதை தான் தொகுத்து தந்தார்கள் என்பதினையும் மனதில் வைத்து, அப்படிப்பட்ட வடிவங்கள் என்ன என்ன, அதன் விளைவுகள் என்ன என்ன என்பதினை பார்ப்போம் வாருங்கள்,
அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் வரை படங்களில் தோன்றி இருக்கும் போது அந்த வடிவங்களை நாம் அடையாள காண நமக்கு வேறு விதமான பார்வைக் கோணம் வேண்டும், இயற்கையாகவே நாம் அனைவருக்கும் பார்ப்பதை அப்படியே உணர்ந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் திறமைகள் இருந்தாலும், சந்தையில் இருந்து கிடைக்கும் இந்த வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாக புள்ளி விவரமாக வடிவங்களை தராது,
எல்லாம் சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற அளவில் தான் அமைந்து இருக்கும், இவாறு அமைந்து இருக்கும் இது போன்ற விசயங்களை கண்டு ஆராய்ந்து தெளிவு பெற்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் உங்கள் பொறுமை தீர்ந்து விடும், பார்த்த மாத்திரத்திலே கண்டு உணர்ந்து கொள்ள சரியான தொடர் பயிர்ச்சிகளே உதவும்,
மேலும் வரைபடங்களில் மேம்போக்காக அமைந்து இருக்கும் உருவங்களை கண்டு பிடிப்பதற்கு முறையான சில பயிற்ச்சிகள் நமக்கு தேவைப்படும், ஆகவே இதை மனதில் கொண்டே கீழே சில படங்களை கொடுத்துள்ளேன், இந்த படங்கள் அனைத்து எதார்த்தமாக பார்க்கும் போது சில விசயங்களையும், ஆழாமாக பார்க்கும் போது வேறு சில விசயங்களையும் நமக்கு உணர்த்தும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக