இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.
பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள்
நீங்கள் தொடங்கும் ஒரு தொழிலுக்கு (Business) தேவைப்படும் முதலே கேப்பிட்டல் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மளிகைக்கடை வியாபாரம் ஆரம்பித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வியாபாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், கடை அமைப்பதற்க்கான இடம், போக்குவரத்து போன்றவற்றிக்காக செலவிடும் தொகையே கேப்பிட்டல் ஆகும்.
All the money that you invest to start a business is called as capital.
கேப்பிட்டலை கீழ்கானும் வகைகளில் சேகரிக்கலாம்,
தொழில் தொடங்குவதற்கு தேவையான பணத்தை தாமே முதலீடு செய்வது. (Self Investment – Full ownership)
தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலை கடனாக (debt) பெறுவது. இம்முறைக்கு, குறிப்பிட்ட தொகையை வட்டியாக (Interest) செலுத்த வேண்டும்.
மேற்க்கண்ட இரு முறைகளில் தொடங்கப்படும் தொழிலில் பெறப்படும் லாபம் (Profit), நட்டம் (Loss) போன்றவைகள் உங்களையே சாரும் (Self responsibility).
முதல் திரட்டுவதற்கு நீங்கள் பங்குகள் (Share) வெளியிடலாம். இம்முறையில் பெறப்படும் லாபம் மற்றும் நட்டம் ஆகியவற்றை பங்குதாரர்களிடம் (Share Holder) பகிர்ந்து கொள்ள வேண்டும். (Like Partnership)
கம்பனிகள் கேப்பிட்டலை/நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவார்கள். (Issue Stocks)
பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)
கடண் (debt) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.
திரட்டபட்ட நிதிக்கு, வட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை. (Need not pay back money/interest)
பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,
பங்குகள் வெளியிடுவதனால், அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் நட்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.
ஒரு கம்பனியின் பங்குகளை வாங்குவதன் முலம், அக்கம்பனி ஈட்டும் லாபதில் பங்குதாரருக்கும் பங்கு உண்டு. இதனால் அக்கம்பனி வளர்ச்சி அடைய, அடைய பங்கின் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு, இன்போஸிஸ் (Infosys – Leading software firm in India) நிறுவனத்தின் நூறு (Rs.100) பங்குகளை ஆயிரம் (Rs.1000) ருபாய் வீதம் (per) பத்தாயிரத்திற்கு (Rs.10,000) வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பங்கின் விலை ருபாய் இரு நூறு (Rs.200) கூடி உள்ளது என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் வைத்துள்ள மொத்த பங்குகளின் மதிப்பு பனிரெண்டாயிரம் ருபாய் (Rs.12,000). இதனால் நீங்கள் பெற்ற லாபம் இரண்டாயிரம் ருபாய் (Rs.2000).
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு (Issuing stocks to public) வெளியிடுமிடம் முதன்மை பங்குச்சந்தை (Primary Market) ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO) என்று பொருள்
புதன், 14 ஜூலை, 2010
பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market
தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
*தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
*சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)
பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)
· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)