ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பயில்வோம் பங்குச்சந்தை - 1

உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்குச் சந்தைகள் பற்றிய விவரங்களை தமிழில் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இத்துறைசார்ந்து செயற்படும் பாலாஜி இப்பகுதியில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார்.

பயில்வோம் பங்குச் சந்தை - 1

பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ பற்றி விளக்கமாக பார்ப்போம்

முதலில் பங்கு சந்தையில் TECHNICAL ANALYZING ஏன் தேவைபடுகிறது என்பதினை பற்றிய விளக்கத்தை பார்ப்போம் …

பொதுவாக பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் அதன் FUNDAMENTAL வளர்ச்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது அதாவது

1- அந்த நிறுவனத்தின் வியாபாரம்

2- நிகர லாபம்

3- நிகர செலவுகள்

4-அவர்களுக்கு இனி வரும் மாதங்களில் கிடைக்கப்போகும் வியாபார வைப்புகள், அதனால் கிடைக்கப்போகும் வருமானம்

5-அந்த நிறுவனம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

6-அதன் நிர்வாக திறன்

7-நிறுவனம் கொடுக்கும் BONUS, DIVIDEND இது போன்ற சமாச்சாரங்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்து அதன் பொருட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் முடிவு செய்யப்படும்

TECHNICAL ANALYZING ஏன் ?

இங்கு பங்குகளின் விலை ஏற்றங்களை முடிவு செய்யும் காரணிகள் FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றால் பிறகு ஏன் TECHNICAL ANALYZING என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும், முக்கியமான கேள்விகள் தான், அது ஏன் என்று பார்ப்போம்

1- விலைகளில் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்வது FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றாலும் அந்த விலை ஏற்ற இரக்கங்களின் பாதைகளை முடிவு செய்வதற்கு ஒரு சில தீர்க்கமான வழிகள் தேவைப்பட்டது

2- அந்த வழிகள் கீழ்கண்டவைகளை கண்டிப்பாக தர வேண்டும்

அதாவது

பங்கு சந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பொருளும் ஏறுவதானாலும் சரி இறங்குவதனாலும் சரி அதை அந்த வழிகள் (TECHNICAL ANALYZING) தெரிந்து வர்த்தகம் செய்பவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்,

3- ஒரு பங்கு உயரும்போது எந்த புள்ளியை இலக்காக கொண்டு நகரும் என்று மிகச்சரியாக சொல்ல வேண்டும்,

4- உயரும் போது ஒரு வேளை ஏதாவது சூழ்நிலை அல்லது காரணங்களால் அந்த பங்கு கீழே வந்தால், எந்த புள்ளிகள் வரை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த TREND தாக்குப்பிடிக்கும் அதாவது அந்த பங்கின் S/L என்ன என்பதை எளிதாக சொல்லும் வழியாக இருக்க வேண்டும்,

5- பொதுவாக அந்த பங்கின் அசைவுகளை முழுவதுமாக சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அதன் FUNDAMENTAL விசயங்களின் வெளிப்பாடாகவும், இனி வரும் காலங்களில் இந்த பங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் சிறந்த வழியாக இருக்க வேண்டும்

6- FUNDAMENTAL ஆக ஒரு பங்கில் ஏதும் முக்கியமான விஷயங்கள் நடந்து அதனால் அந்த பங்கின் விலையில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயர்வு ஏற்ப்படும் என்ற சூழ்நிலை இருந்தால் அதை முன் கூட்டியே அந்த வழிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் முறையில் இருக்க வேண்டும்

7- பொதுவாக இன்னும் சொல்ல வேண்டுமானால் வெறும் அந்த வழிகளின் மூலம் மட்டுமே ஒரு பங்கின் ஆதி அந்தங்களை சொல்லும் ஒரு வழி முறையாக இருக்க வேண்டும்

இது போன்ற விசயங்களை நாம் முன்னர் பார்த்த FUNDAMENTAL கூறுகளை வைத்து கணிக்க முடியாது இல்லையா, ஆகவே தான் அதற்கும் மேலாக இன்னும் சரியாக சில விஷயங்கள் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்பட்டது,

மேலும் பங்கு சந்தைகளில் அன்று முதல் இன்று வரை பங்குகள் எல்லாம் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மேலும் கீழும் பங்குகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும் (அப்படி நகர்ந்தால் தானே அது பங்கு சந்தை), இப்படி தினமும் நொடிக்கு நொடி நகர வேண்டுமானால் அதற்க்கு என்று ஒரு வழிமுறை தேவைப்படும் இல்லையா,

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பேரூர்ந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படி கிளம்பும் போது நேரடியாக சென்னையிலிருந்து பறந்து அடுத்த நொடியில் திருச்சியில் சேர முடியாது இல்லையா,

முதலில் திருச்சி சென்றடைய தேவையான அளவிற்கு பெட்ரோல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் வண்டியை பத்திரமாக ஓட்டும் ஓட்டுனரை நியமிக்க வேண்டும், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் என்று முடிவு செய்து அதை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுத்த வேண்டும், தேவையான பயணிகளை ஏற்றிக் கொள்ளவேண்டும், இடை இடையே இறங்குபவர்களையும் ஏற்றிக் கொள்ளவேண்டும் அவர்களுக்கான பயண சீட்டுகளை வழங்க வேண்டும், பிறகு மெல்ல தாம்பரம் வந்து அதற்கான சாலையை பிடித்து வருசயாக ஒவ்வொரு ஊராக கடந்து பிறகு திருச்சியை அடையவேண்டும் இப்படி தானே வந்து சேர முடியும் ,

அதுமாதிரி தான் TECHNICAL ANALYZING கும் அதாவது திருச்சிக்கு செல்லவேண்டும் என்பது FUNDAMENTAL விஷயமாகும் அதாவது ஒரு குறிப்பிட்ட ORDER கிடைப்பதின் மூலம் ஒரு நிறுவனத்திற்கு 1000 கோடி லாபம் கிடைக்கும் என்று இருப்பது FUNDAMENTAL விஷயம் அதே நேரம் இந்த லாபத்தினால் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் அதன் விலையில் இருந்து 60 ரூபாய் உயர வேண்டும் என்ற நிலை உருவாகும், அப்படி உருவாகும் போது, அடுத்த நொடியே அந்த பங்கின் விலையில் 60 ரூபாயை உயர்த்திக்காட்ட முடியாது இல்லையா,

அப்படி உயர்த்திக்காட்டுவது என்பது BUS ஐ சென்னையிலிருந்து அடுத்த நொடி திருச்சியில் இறக்குவதற்கு சமம் அப்படி செய்ய முடியாது இல்லையா, மேலும் நாம் முன்னர் சொன்ன முறையில் தானே BUS ஐ திருச்சிக்கு ஒட்டி வர முடியும், அவ்வாறு பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் இருந்து எப்படி அடுத்த விலைக்கு கொண்டு வருவது என்பதினை TECHNICAL ANALYZING உதவி கொண்டு தான் செய்ய முடியும் அதாவது முதலில் எவளவு தூரம் அந்த பங்கின் விலையை ஏற்ற வேண்டும் பிறகு எவளவு தூரம் இறக்கவேண்டும் மறுபடியும் எப்பொழுது உயர்த்த வேண்டும் இப்படி எல்லாம் முடிவு செய்வதற்கு TECHNICAL ANALYZING பயன்படுகிறது,

சரி TECHNICAL ANALYZING ஏன் பங்கு சந்தைகளில் தேவைப்படுகிறது என்று உங்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன், அடுத்து TECHNICAL ANALYZING எப்படி செயல் படுகிறது. எப்படி எல்லாம் நாம் இதனை பயன்படுத்துவது என்பதினைப்பற்றி அடுத்த பகுதியில் பார்போம்…



பாகம் – 2


கடந்த வாரம் பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் அந்த குறிப்பிட்ட பங்குகளின் FUNDAMENTAL விசயங்களில் ஏற்ப்படும் மாற்றங்களே என்பதை பற்றி பார்த்தோம். மேலும் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்கள் ஒரு குறிப்பிட்ட வழிகளை (FORMULAS) பின்பற்றியே நகர்வதாகவும் அந்த வழி முறையானது சில முக்கியமான விசயங்களை கண்டிப்பாக அதை பயன்படுத்துவோருக்கு தர வேண்டும் என்றும் அந்த முக்கியமான விஷயங்கள் எவை எவை என்பதினை பற்றியும் பார்த்தோம்.

இந்த வாரம் அந்த வழிகள் எப்படி தோன்றியது என்று பார்ப்போம்…
TECHNICAL ANALYSING என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற நகர்வுகளே ஆகும், அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது, அதாவது, இந்த TECHNICAL ANALYSING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது,

அதற்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும், கிபி சுமார் 1880 இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல் முதலீடு செய்து தடுமாறிக்கொண்டிருந்த காலம், அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 என்ற ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average),

அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், இந்த விசயங்களை வைத்து ஒரு பங்கில் எப்பொழுது ENTRY ஆகலாம் எப்பொழுது PROFIT BOOKING செய்யலாம் என்பன போன்ற விசயங்களை எளிதாக முடிவு செய்ய பயனுள்ளதாக இருந்து வருகிறது, மேலும் இந்த TECHNICAL ANALYSING கிற்கென்று முக்கியமான சில விதிமுறைகளை நமக்கு ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ளார், அந்த முக்கியமான விதிமுறைகளில் ஒரு சிலவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்….
PRINCIPLES OF TECHNICAL ANALYZING - BY CHARLES DOW

1-HISTORY REPETS IT SELF

2-AVERAGES ARE DISCOUNTS EVERY THING

(MARKETS ARE ALWAYS RIGHT)

3-PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

திரு CHARLES DOW அவர்கள் கொடுத்த முக்கியமான இந்த மூன்று விசயங்களை வைத்து சந்தையின் போக்குகளை நாம் TECHNICAL ANALYZING துணை கொண்டு எப்படி கணிக்க வேண்டும் என்பதினை நாம் அறிந்து கொள்ளலாம், இந்த விசயங்களை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்…

முதல் விதி:-

HISTORY REPEATS IT SELF

அதாவது பங்கு சந்தையை பொறுத்த வரை சந்தையில் முன்னர் நடந்த விஷயங்கள் தான் (உயர்வுகளும், வீழ்ச்சிகளும்) மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து வரும், அனால் வரும் முறைகளும், வழிகளும் வேண்டுமானால் மாறி இருக்கலாம், இதை இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம், அதாவது மனிதன் இந்த உலகத்தில் தோன்றி ஓரளவு ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கியது முதல் போர் என்பது இருந்து வருவது நாம் அறிந்ததே, ஆனால் நாளாக நாளாக மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கற்களில் இருந்து இன்று அணு ஆயுதம் வரை மாறி வருவது நாம் அறிந்ததே, இன்னும் நாளாக நாளாக ஆயுதங்கள் மாறும் ஆனால் போர் என்ற ஒன்று மாறுவதில்லை,
அதாவது ஆயுதங்கள் மாறினாலும், காரண காரியங்கள் மாறினாலும் இருவருக்கோ அல்லது இரு நாட்டிற்கோ நடக்கும் போர் என்றும் மாறாது, இதே போல் தான் சந்தையில் உயர்வுகளும், தாழ்வுகளும் என்றுமே மாறாது அனால் எதனால் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும், எவளவு தூரம் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும் என்ற காரண காரியங்கள் வேண்டுமானால் மாறி மாறி வரலாம், அனால் உயர்வு தாழ்வுகள் என்றுமே பங்கு சந்தையில் உடலும் உயிருமாக இருந்து கொண்டே இருக்கும், இதைத்தான் "HISTORY REPEATS IT SELF" என்று திரு CHARLES DOW அவர்கள் சொல்லி இருந்தார், சரி அடுத்த விதியை பார்ப்போம்

இரண்டாம் விதி:-

AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)
இந்த விதி மிக முக்கியமானது, சந்தை எப்பொழுதெல்லாம் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த கேள்வி நம் மனதில் எழும், ஏன் பங்கு சந்தை இவளவு தூரம் வீழ்ச்சியடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை 1884 ஆம் ஆண்டு வாக்கிலே திரு CHARLES DOW அவர்கள் தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக விட்டுச்சென்றுள்ளார், அதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,
அதாவது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைகளை நாம் அந்த பங்கின் இன்றைய சொத்து மதிப்புடன் (அசையும் மற்றும் அசையா சொத்துகளின் படி (இவ்விரண்டில் அந்த நிறுவனத்தின் அனைத்து விசயங்களும் அடங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்)) ஒப்பிட்டுப்பார்த்தால் பங்குகளின் விலைகளில் அநேக ஒற்றுமயின்மையை நீங்கள் காணலாம்,

அதாவது உதாரணமாக ஒரு XYZ என்ற நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகள் 2 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் அந்த XYZ என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் உண்மையான விலை சரியாக 100 ரூபாய் என்று இருக்க வேண்டும், ஆனால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை பங்கு சந்தைகளில் 100 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறதா என்று நீங்கள் பார்த்தல் அந்த விலையில் வர்த்தகம் ஆகாது அதற்க்கு பதில் ரூ 150/- என்ற விலையிலோ, அல்லது ரூ 200/- என்ற விலையிலோ கூட வர்த்தகம் ஆகலாம்,
ஏன் அப்படி சரியான விலையில் வர்த்தக ஆகாமல் குத்து மதிப்பாக இல்லாத விலையில் வர்த்தகம் ஆகிறதே, அப்படியானால் பங்கு சந்தை என்றால் ஏமாற்று வேலையா, இங்கு வியாபாரம் செய்வது சூதாட்டம் என்று சிலர் சொல்கின்றனரே அது உண்மையா, ஏகப்பட்ட பணத்தினை கைகளில் வைத்துள்ளவர்கள் முடிவு செய்து நிர்ணயிப்பது தான் பங்கு சந்தையா, இப்படி எல்லாம் உங்கள் மனதில் கேள்விகள் எழுகிறதா, இதற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதா, அப்படி எனில் சற்று பொறுமையாக அடுத்த பகுதியில் காத்து இருங்கள்

1 கருத்து:

  1. பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.

    ஒரு விசயத்தில் ஏன் தோல்வி பெறுகிறோம் அல்லது பெற்றோம் என்பதனை அறிந்தாலே,வெற்றி பெறுவது எளிது. பங்குச் சந்தையில் அனைவரும் எப்படி லாபம் பெறலாம் என்பதில் தான் கவனம் வைக்கிறார்களே ஒலிய, தோல்வி எதனால் வந்தது அல்லது வருகிறது என்பதை அறிய ஒரு பொழுதும் முற்படுவது இல்லை. நாம் இப்பொழுது பங்குச் சந்தையில் பெரும்பாலோனோர் ஏன் நஷ்டம் அடைகிறார்கள் என்பதனைப் பற்றி பார்ப்போம். இதனை தவிர்த்தாலே லாபம் பெறுவது கட்டாயம் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும்.

    1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.

    நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட் இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும் ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள் கட்டாயம் இழப்பது உறுதி.

    http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

    பதிலளிநீக்கு