இருந்தாலும் இங்கு ஒரு மூட்டை நெல்லை மட்டும் sample க்கு காட்டி மற்ற மூட்டைகளில் எல்லாம் நெல்லுடன் வேறு சில கலவைகளை கலந்து விற்கும் விவசாய்கள் அதிகம் (false break out patterns), ஆகவே தரகு தொழிலும் அனேக கஷ்டங்கள் உண்டு. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம் இல்லையேல் வெறுப்பும்! விரக்தியும்! சந்தையின் மேல் ஏற்பட்டுப்போகும். சரி விசயத்திற்கு வருவோம் வாருங்கள்!
ஒவ்வொரு candle களாக சேர்ந்து ஒரு வடிவமாக மாறும் என்று பார்த்தோம் இல்லையா. அது போன்ற வடிவங்கள் என்ன என்ன என்று முதலில் சொல்லி விடுகிறேன். பிறகு அவைகள் ஒவ்வொன்றை பற்றி விவரமாக பார்ப்போம்…
வடிவங்களின் பெயர்கள் (TYPES OF PATTERNS) :
CUP PATTERN
HEAD & SHOULDER PATTERN
CHANNEL PATTERN
TRIANGLE PATTERN
FLAG PATTERN
PENANT PATTERN
"W” PATTERNஇவ்வாறாக தான் ஒவ்வொரு CHART படங்களிலும் ஒவொரு CANDLE களாக ஒருங்கிணைந்து! மேற்கண்ட வடிவங்களில் வந்து நிற்கும். இதனை கண்டு பிடித்து எந்த புள்ளியில் வர்த்தகத்தை தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதினை அறிந்து செயல் பட்டால் பங்கு சந்தையில் வெற்றி பெறலாம்...
சரி ஒவ்வொரு PATTERN ஆக விளக்கமாக பார்ப்போம் வாருங்கள். அதற்க்கு முன் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டியது எனது கடமையும் கூட. அதாவதுECHNICAL ANALYSIS இல் உள்ள நுட்பமான சில விசயங்களையும் 100 வீத எழுத்தின் மூலம் மட்டுமே கொடுத்து விடவும் முடியாது. இந்த தொடர் முழுமையாக முடிந்த பின்பு, ஒரு முறைக்கு மறு முறை படித்து TECHNICAL ANALYSIS பற்றிய ஒரு தெளிவை பெற்ற பின்பு! உங்களுக்கு அருகில் இருக்கும் யாராவது ஒரு தேர்ந்த TECHNICAL ANALYST நடத்தும் TECHNICAL ANALYSIS வகுப்பிற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.
ஏன் என்றால் இந்த தொடரின் மூலம் உங்களுக்கு நல்ல பயிற்ச்சிகள் ஏற்பட்டாலும் அநேக சந்தேகங்கள் வரும்இ இவ்வாறு வரும் சந்தேகங்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளர் மூலம் நிவர்த்தி செய்ய முடியும். அதே நேரம் என்னிடம் நீங்கள் கேள்வியாக கேட்டாலும்! இதில் ஏற்படும் சந்தேகங்கள் எல்லாம் நேருக்கு நேர் அமர்ந்து சில விசயங்களை உங்களுக்கு காட்டினால் மட்டுமே இது சாத்தியம். ஆகவே உங்களுக்கு அருகில் நல்ல தேர்ந்த நுட்ப ஆய்வாளரிடம் ஒரு முறையாவது அவர்கள் நடத்தும் வகுப்பில் உங்கள் சந்தேகங்களுடன் கலந்து கொள்ளுங்கள். மேலும் சிறப்பான பயிற்சி கிடைக்கும். சரி விசயத்திற்கு வருவோம்
CUP:
இந்தPATTERN தான் TECHNICAL ANALYSIS இல் முக்கியமான வடிவமாகும். அனைத்து வடிவங்களிலும் மறைமுகமாக இருக்கும் ஒரு வடிவமும் ஆகும். பொதுவாக ஒரு CUPஐ போல் இருப்பதால் இதற்க்கு இந்த பெயர் வைத்து இருக்கின்றார்கள். பொதுவாக ஒரு பங்கின் நகர்வுகள் இதற்குள் தான் இருக்கும். அதாவது ஒரு உயர்வு, மறுபடியும் வீழ்ச்சி, வீழ்ச்சி முடிந்து மறுபடியும் உயர்வு, இவ்வாறு உயர்ந்து முன்னர் எங்கிருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்ததோ அந்த புள்ளியை மறுபடியும் உயர்ந்து சென்று அடையும் போது முழுவதுமாக ஒருCUP என்ற வடிவம் உருவாகிறது.
இவ்வாறு ஒரு வடிவம் அமைந்த பிறகு இதற்க்கான விளைவுகள் கீழ் கண்ட முறையில் இருந்தது. அதாவது இந்த CUP என்ற அமைப்பின் உயரம் எவளவோ அந்த உயரத்திற்கு மறுபடியும் உயர்ந்தது. அதாவது CUP இன் TOP ஐ நிறைவு செய்த பிறகு, அந்த TOP இல் இருந்து (எந்த புள்ளியில் இருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்து மறுபடியும் அந்த புள்ளியை வந்த அடைந்த இடம் அல்லது புள்ளி ) அந்த CUP இன் உயரம் மேலே சென்றது. இது தான் CUP என்ற வடிவம் ஏற்பட்ட பின்பு ஏற்படும் விளைவு…
மேலும் இந்த CUP என்ற அமைப்பு பல வடிவங்களில் அமைந்து வந்தது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு விளைவுகள் ஏற்பட்டன. அவைகளை பற்றியும் பார்த்து விடுவோம். அதாவது CUP என்ற அமைப்பில் எத்தினை வடிவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்
அதற்க்கு முன் CUP என்ற வடிவத்தின் படத்தையும் பார்த்து விடுங்கள்
சரி CUP என்ற வடிவம் எந்த மாதிரி எல்லாம் CHART படங்களில் உருவாகும் என்பதினை பார்ப்போம். முதலில் அவைகளின் பெயர்களை பார்த்து விடுவோம்
TYPES OF CUP - CUP என்ற வடிவத்தின் வகைகள:-
CUP
CUP WITH HANDLE
SEMI CUP
SEMI CUP WITH HANDLE
INVERTED CUP
INVERTED CUP WITH HANDLE
INVERTED SEMI CUP
INVERTED SEMI CUP WITH HANDLE
சரி இவைகளை பற்றி விவரமாக
CUP PATTERN பற்றி பார்த்து வந்தோம், அதன் தொடர்ச்சியாக CUP PATTERN இல் உள்ள மற்ற விஷயங்கள் பற்றியும் பார்த்து விடுவோம், முழுமையான CUP FORMATION எப்படி உருவாகிறது, அதன் முழுமையின் பிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்ன என்று பார்த்தோம் இல்லையா, அடுத்து CUP WITH HANDLE PATTERN பற்றி பார்ப்போம்,
இது ஒன்றும் இல்லை CHINA CLY TEA CUP பார்த்து இருப்பீர்கள் இல்லையா அதே போன்றதொரு அமைப்பை தான் நாம் CHART படங்களில் பார்ப்போம், அதனால் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு விஷயம் மேலோட்டமாக தான் இருக்கும் ஆனால் சற்று ஆழமாக யோசித்து பாருங்கள் எதார்த்தமான விஷயங்கள் புலப்படும்,
அதாவது வெறும் TEA CUP இல் சூடான TEA குடிக்கும் போது ஏற்படும் சங்கடங்களும், HANDLE உள்ள TEA CUP இல் சூடான TEA குடிக்கும் போது உள்ள சௌகரியங்களும் நாம் அறிந்ததே, அந்த எதார்த்தமான விஷயத்தை இந்த CHART படங்களில் ஏற்படும் வடிவங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள், அதாவது HANDLE இல்லாத CUP இல் TEA குடிக்க சற்று நேரம் எடுக்கும், அதே நேரம் HANDLE உள்ள CUP இல் TEA அருந்துவது விரைவாகவும் இருக்கும்,
அதே நேரம் கை சுடாமல் CUP இல் உள்ள TEA ஐ சூடு குறைக்க இந்த HANDLE ஐ பயன்படுத்தி ஒரு சுழட்டு சுழட்டலாம், அது மாதிரி தான் இது போன்ற CUP WITH HANDLE வடிவம் உள்ள அமைப்பு CHART படங்களில் வந்தால் எளிதில் பத்திரமாக பணம் எடுக்கலாம், மேலும் இதில் முதல் இலக்காக HANDLE இன் உயரமும், அதன் பிறகு FIBONACCI அளவுகளின் படி சற்று இளைப்பாறல் பெற்று, பிறகு முழு வடிவமான CUP இன் உயரத்தை இலக்காக அடைய நகரும்,
மேலும் பங்குசந்தையில் நகர்வுகள் எப்பொழுதும் மேலும் கீழுமான அசைவுகளுடன் இருக்குமே தவிர ஒரே நேர் கோட்டில் குதிரைக்கு லாடம் கட்டியது போல் இயங்காது, நாம் முன்னரே பார்த்தோம், பங்கு சந்தையின் நகர்வுகள் என்பது MECHANICAL ஆக நடப்பது இல்லை! இது பல கோடி மனித மூளைகள் சில விதி முறைகளை கடை பிடித்து வருமானம் செய்ய செயல்படும் ஒரு முக்கியமான இடம், அதாவது
கிரிக்கெட் மைதானத்தில் பல ஆண்டுகள் கடினமான பயிற்சி பெற்று பல நுணுக்கங்களை அனுபவத்தில் பெற்று, எந்த இடத்தில் என்ன மாதிரியான பந்துகளை போடவேண்டும் என்ற அனுபவங்களை பெற்ற மிக திறமைசாலிகளான மெக்ராத், இசாந்த் சர்மா, ஜாகிர் கான், ஷேன் வார்னே போன்ற பந்து வீச்சாளர்கள் விளையாடும் மைதானத்தில், வெறும் தொலை காட்ச்சியில் மட்டும் கிரிக்கெட் பார்த்த சாதாரண ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு மகனாக பிறந்த நபர் BATSMAN ஆக இந்த பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் விளையாட இறங்கினால் என்ன ஆகும்!
அவர் OUT ஆவது ஒரு புறம் இருந்தாலும், இவர்களின் பந்து வீச்சு வேகத்தின், சுழண்டு தாறுமாறாக செல்லும் நெளிவு சுளிவுகளில், இவரின் உயிருக்கு என்ன உத்தரவாதம், அதுவும் இவர் வீட்டுக்கு ஒரே பிள்ளை இவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த குடும்பத்தின் கதி, ஒரு வேலை அவருக்கு திருமணம் ஆகி குழந்தை வேறு இருந்தால், யோசித்து பாருங்கள்,
பந்து போடுபவர்கள் எதிரே இருப்பவர் இந்த விளையாட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர் என்று அறிந்து இருந்தால் சற்று மெதுவாக பந்து போடும் வாய்ப்புகள் கூட உள்ளது, ஆனால் பங்கு சந்தையில் உள்ள பெரும் கைகளிடம் இந்த இரக்கத்தை எதிர் பார்க்க முடியுமா !?, ஐயோ பாவம் இவர் குறைந்த வருமானம் உள்ளவர், இந்த வருமான வாய்ப்பை விட்டால் இவருக்கு வேறு வழி இல்லை, என்று உங்களுக்காக சந்தையை வளைத்து நெளித்து நகர்த்துவார்களா, யோசித்து பாருங்கள்! நான் வெறும் கதை சொல்வதற்காக இதை சொல்ல வில்லை,
நான் அறிந்து பங்கு சந்தையில் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற விவரம் மட்டுமே தெரிந்து வியாபாரம் செய்து காணாமல் போனவர்கள் அநேகம், அனைத்து பயிர்ச்சிகளும் பெற்ற சச்சின் டெண்டுல்கர் மெக்ராத் பந்தில் RUN எடுப்பதை விட தனது விக்கட்டை பாதுகாப்பதற்கு தடுமாறும் தடுமாற்றம் நீங்கள் விளையாட்டுகளில் பார்த்து இருப்பீர்கள்,
இப்படி இருக்கும் போது ஆயிரம் மெக்ராத்துகள் உள்ள நமது பங்கு சந்தையில் குறைந்தது, இன்ன மாதிரியான விதி முறைகளோடு தான் சந்தை நகர்கிறது என்பதினையாவது தெரிந்து வர்த்தகம் செய்வது நல்லது, ஒன்றுமே தெரியாமல் அநேக நண்பர்கள் பங்கு சந்தையில் விளையாட வருகிறார்கள்!
அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம் முதலில் FUNDAMENTAL மற்றும் TECHNICAL ANALYSIS பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், பிறகு இங்கு வாருங்கள் என்பதே, ஒரு வேலை உங்கள் நண்பர்கள் யாரும் இப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த பதிவை படிக்க சொல்லுங்கள்,
ஆகவே கண்டிப்பாக பங்கு சந்தையில் பங்கு பெரும் அனைவரும் FUNDAMENTAL ANALYSIS மற்றும் TECHNICAL ANALYSIS பற்றிய அனுபவங்களை பெற்று கொள்ளுங்கள், சில நேரங்களில் மேற்கண்ட விஷயங்கள் இல்லாமல் வெற்றிகள் வேண்டுமானால் சாத்தியமாகலாம், எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை,
மேலும் தின வர்த்தகர்கள் மற்றும் குறுகிய தின முதலீட்டாளர்கள் மிக மிக அவசியமாக இந்த விசயங்களை பயின்று கொள்வது முக்கியம், ஆகவே இந்த விஷயங்கள் அறிந்திராத உங்கள் நண்பர்களுக்கு இதனை எடுத்து சொல்லுங்கள், சரி விசயத்திற்கு வருவோம்
HANDLE இன் இலக்குகள் நிறைவு பெற்றவுடன் அடுத்து CUP இன் உயரத்தை அடைய மேலும் கீழும் ஏற்ற இறக்கங்கள் உடனே சந்தை நகர்ந்து செல்லும், இந்த மாதிரி ஏற்ற இறக்கங்களுடன் நகர்வதை கவனித்தவர்கள், தொடர்ச்சியாக எந்த விதமான நகவுகளிலும் (உயர்வு மற்றும் வீழ்ச்சி) சந்தை இந்த முறையில் தான் நகர்கிறது என்பதினை கண்டுணர்ந்தனர், மேலும் இது போன்று நகர்வதில் சந்தை சில விதி முறைகளையும் கடை பிடிப்பதையும் கண்டுணர்ந்தனர்,
ஆகவே இதனை தொகுத்து! இந்த விசயத்திற்கு ஒரு பெயரிட்டு! இது போன்று நடந்தால் இதன் விளைவுகள் இப்படி தான் இருக்கின்றது என்பதினை நமக்கு TECHNICAL ANALYSIS மூலம் தெரிவித்தார்கள், அதன் படி இதற்க்கு பெயர் STYLE OF PRICE MOVE என்று தலைப்பு வைத்து, அந்த தலைப்பின் கீழ்! கீழ் கண்ட விசயங்களை தெரிவித்தார்கள்,
அதாவது சந்தையில் உள்ள பங்குகள் எப்பொழுதும் ஒரு இலக்கை வைத்து உயர தொடங்கும் போது, முதலில் உயர்வது பிறகு சற்று இளைப்பாறல் மற்றும் பகுதி லாபங்களை உறுதி செய்துகொள்தல் மற்றும் தின வர்த்தகர்களின் அவசரகதியான செயல்பாடுகள் மற்றும் சந்தையின் போக்குகள் என்பன போன்ற காரணக்களால் சற்று கீழிறங்கி மறுபடியும் உயர்தல், மறுபடியும் கீழிறங்கி மறுபடியும் உயர்தல் இப்படியாக தனது இலக்குகளை அடைவதற்குள் அநேக சின்ன சின்ன உயர்வு தாழ்வுகளை கொண்டே நகர்ந்து வருகிறது,
இவ்வாறு ஏறி இறங்கி! ஏறி இறங்கி நகந்து வருவதில் சில அனுகூலமான விசயங்களையும் கண்டுனர்ந்தார்கள், அதன் படி ஒரு தீர்கமான முடிவுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளின் படி இந்த மாதிரி உயரும் போது எந்த இடத்தில் இருந்து இளைப்பாறல் பெறுவதற்காக சற்று கீழ் இறங்கிகிறதோ அதற்க்கு TOP என்றும், அது தொடர்ந்து உயரத்தில் செல்வதற்கான இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த TOP ஐ HIGHER TOP என்றும் பெயரிட்டார்கள்,
அதே நேரத்தில் எந்த இடத்தில் (LOW POINT) இருந்து மறுபடியும் உயர கிளம்புகிறதோ அதற்க்கு BOTTOM என்றும்! தற்பொழுது இந்த பங்கு தொடர்ந்து உயரும் இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த BOTTOM ஐ HIGHER BOTTOM என்றும் பெயரிட்டார்கள், இவ்வாறு அந்த பங்கு தொடர்ந்து தான் உயரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரையும் இதே போன்று உயர்ந்து மறுபடியும் சிறிது இறங்கி! இப்படியே தொடர்ந்து நகர்ந்துதான் தனது இலக்குகளை அடையும், இதற்க்கு பெயர் தான் HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM ,
இப்படியே தொடர்ந்து ஏறிக்கொண்டே இல்லாமல் தனது அடைய வேண்டிய இலக்குகள் முடிந்தவுடன் கீழே வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் இல்லையா, அப்படி எந்த இடத்தில் தனது உயரும் திசையினை மாற்றி இறங்கும் திசையினை நோக்கி வரப்போகிறது என்பதினை இந்த HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM ஐ வைத்து ஒரு முடிவுக்கு வருவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்,
அதாவது தொடர்ந்து HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM என்று உயர்ந்து வரும் நேரத்தில்! உயரத்தில் ஏற்படும் இறுதியான HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதாவது இறுதியாக ஒரு HIGHER BOTTOM ஏற்பட்டவுடன் மறுபடியும் உயரத்தில் முன்னேறி சென்று, இதற்க்கு முன் ஏற்பட்ட HIGHER TOP ஐ உடைத்து புதிய HIGHER TOP ஐ உருவாக்காமல், திணறி! மறுபடியும் கீழே வந்து தற்பொழுது ஏற்பட்டிருக்கும் HIGHER BOTTOM ஐ மறுபடியும் கீழே கடந்து செல்லும் போது இந்த உயர்வு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது,
மேலும் இது போன்று ஏற்பட்ட பின்பு அந்த பங்கு தொடர்ந்து கீழே வர முயற்சி செய்ய ஆரம்பிக்கும், இவ்வாறு இறங்க ஆரம்பித்தவுடன் முன்னர் உயரும் போது எப்படி ஏறி இறங்கி ஏறி இறங்கி சென்றதோ, அதே முறையில் தான் இப்பொழுதும் நகரும், அதாவது இறங்கி ஏறி இறங்கி ஏறி செல்லும், ஆனால் நகர்வு கீழ் நோக்கியதாக இருக்கும் இல்லையா,
அதன்படி முதலில் HIGHER BOTTOM ஐ கீழே கடந்து சென்று பின்பு மீண்டும் மேலே உயரும், அப்படி உயர்ந்து மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு TOP என்றும், இப்பொழுது இறங்கும் இலக்குகளை பெற்று இருப்பதால் இதற்க்கு LOWER TOP என்று பெயர்,
மறுபடியும் முன்னர் ஏற்பட்ட BOTTOM புள்ளியை கீழே கடந்து சென்று, மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து சற்று உயர ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு BOTTOM என்றும் இப்பொழுது இறக்கத்தில் இருப்பதால் இதற்க்கு LOWER BOTTOM என்று பெயர்,
ஆகவே இந்த இறக்கம் முழுவதும் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் தான் நகரும், மேலும் முக்கியமான நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM என்ற முறையில் உயரும் போது ஒவ்வொரு தடவையும் HIGHER TOP எனப்படும் பழைய உயரங்களை கடந்து செல்ல வேண்டும்,மேலும் HIGHER BOTTOM எனப்படும் பழைய LOW புள்ளிகளை கீழே கடக்காமல் இருக்க வேண்டும்,
அதே போல் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் நகர்வுகள் கீழ் நோக்கி இருக்கும் போதும் ஒவ்வொரு தடவையும் LOWER BOTTOM எனப்படும் LOW புள்ளிகளை கீழே கடந்து புதிய LOWER BOTTOM களை சந்திக்க வேண்டும், அதே நேரம் LOWER TOP என்ற புள்ளிகளை கடந்து மேலே செல்ல கூடாது,
ஆகவே இங்கு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் HIGHER BOTTOM என்ற புள்ளி கீழே கடக்கப்பட வேண்டும் என்றும், LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் LOWER TOP மேலே கடக்கப்பட வேண்டும் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,
பொதுவாக இவ்வாறு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் உயர்ந்து, LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் கீழே வந்து ஆரம்பித்த இடத்திலே நிற்கும் பொது CUP என்ற வடிவம் ஏற்படும், ஆகவே தான் நான் முன்பே சொன்னேன் ஒவ்வொரு வடிவத்திலும் இந்த CUP என்ற வடிவம் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று,
மேலும் இந்த CUP FORMATION என்ற அமைப்பு HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் விலைகளின் நகர்வுகள் அடுக்கடுக்காக ஏற்படுவதினால் அமையும், ஆகவே முதலில் HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM, பிறகு CUP பிறகு மற்றதெல்லாம் வருசயாக வரும்,
சரி இப்பொழுது CUP WITH HANDLE மற்றும் HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும் LOWER TOP & LOWER BOTTOM போன்றவைகளின் படங்களை பாருங்கள்
cup with handle என்ற pattern பற்றி பார்த்து வந்தோம், இதில் முதல் இலக்காக handle இன் உயரம் இருக்கும் என்றும், அடுத்து cup இன் உயரத்தை இலக்காக வைத்து நகர தொடங்கும் என்றும், அவ்வாறு நகரும் போது higher top, higher bottom என்ற முறையில் ஏறி இறங்கி, ஏறி இறங்கியே நகரும் என்றும் பார்த்தோம்,
மேலும் இந்த cup in உயரத்தை இலக்காக வைத்து நகரும் போது முதலில் அந்த cup இன் மொத்த உயரத்தில் சில சதவிகிதங்களை உயரத்தில் சென்று அடையும் போது, நல்ல இளைப்பாறல் அல்லது profit booking என்ற நிலைமை வரும், இந்த சதவிகிதங்கள் எதன் அடிப்படையில் வருகிறது என்றும், அந்த சதவிகிதங்கள் என்ன என்ன என்றும் இப்பொழுது பார்ப்போம்,
அதாவது technical analysis இல் Fibonacci Retracement என்ற ஒரு அளவுகோள் உள்ளது, இந்த அளவுகோள் ஆனது முழுவது சதவிகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது ஆகும், மேலும் இந்த Fibonacci முறைகளில் retracement என்ற முறை மட்டும் இல்லாமல் இன்னும் சில விசயங்களும் உள்ளது, அதாவது Fibonacci Time Zone, Fibonacci arc, Fibonacci fan என்று அநேக விசயங்களை நாம் நமது Technical analysis இல் பயன்படுத்தலாம்,
இதில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் மிக முக்கியமான விளைவுகளை தரக்கூடியதுமான Fibonacci Retracement ஐ பற்றி சற்று விரிவாக பார்ப்போம் அதற்க்கு முன் இந்த அளவுகள் எப்படி வந்தது, இது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது, இதன் முக்கியத்துவம் என்ன என்பன வற்றை சற்று விரிவாக இப்பொழுது பார்ப்போம்…
அதற்க்கு முன் FIBONACCI என்று சொல்கிறோமே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்,
FIBONACCI என்பவர் கிபி 1175 TO கிபி 1250 களில் ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதை
இவர் பிறந்தது இத்தாலியில் உள்ள பிசா என்னும் இடத்தில்,
இவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் மிகப்பெரிய மற்றும் செயற்கரிய செயல்கள் அநேகம் செய்துள்ளார்,
இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் அன்று கொடுத்த விசயங்களை தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம்,
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ROMAN NUMBERS ஐ சொல்லலாம், மேலும் நாம் பயன்படுத்தும் கூட்டல் கழித்தல் களில் கூட இவரின் வழிகட்டுதல்கள் உண்டு …..
இப்படி நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,
சரி நாம் TECHNICAL ANALYSING இல் பயன்படுத்தி வரும் FIBONACCI RETRACEMENT LEVELS இல் சில சதவிகிதங்களை பயன்படுத்துவோம், அவைகள் 23.6%, 38.2%, 50%, 61.8%, 76.4%, 85.4% இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது 61.8%, 38.2%, இந்த இரண்டு அளவுகள் எப்படி வந்தது, மேலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றியும், மற்றும் 23.6%, 50%, 76.4%, 85.4%, என்ற அளவுகள் எப்படி வந்தது! மேலும் அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம்,
கிபி 1175 TO கிபி 1250 களில் வாழ்ந்த FIBONACCI அவர்கள் சில எண்களின் வரிசையை கண்டுபிடித்தார் ,
அதாவது முதலில் 0 வை எழுதிக்கொள்ளவேண்டும்
பிறகு அந்த 0 வுடன் 1 என்ற எண்ணை கூட்ட வேண்டும், 1 என்று விடை வரும்,
வந்த விடையுடன் முன்னாள் உள்ள எண்ணான 1 மீண்டும் கூட்ட வேண்டும், 2 என்று விடை வரும், அதனுடன் முன்னால உள்ள எண்ணான 1 ஐ கூட்ட வேண்டும், 3 என்று விடை வரும், அதனுடன் முன்னாள் உள்ள எண்ணான 2 ஐ கூட்ட வேண்டும், 5 என்று விடை வரும், அதனுடன் முன்னால உள்ள எண்ணான 3 ஐ கூட்ட வேண்டும், 8 என்று விடை வரும், அதனுடன் முன்னால உள்ள எண்ணான 5 ஐ கூட்ட வேண்டும் ,
இப்படியாக முன்னாள் உள்ள எண்ணுடன் கூட்டிக்கொண்டே சென்றால், நீளமான எண்களின் வரிசை வரும் , அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS,
என்ன புரியவில்லையா , கீழே உள்ள எண்களின் வரிசையை பாருங்கள் புரியும்
0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987........
இப்போ புரியுதா , அதாவது இந்த வரிசையை பாருங்கள்,
முதலில் 0 வை எழுதிக்கொள்ள வேண்டும், பின் அதனுடன் 1 ஐ கூட்ட வேண்டும், வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும், அடுத்து இந்த 1 என்றஎண்ணுடன் முன்னாள் உள்ள 0 வை கூட்ட வேண்டும், வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும், அடுத்து இந்த 1 என்ற எண்ணுடன் முன்னாள் உள்ள 1 ஐ கூட்ட வேண்டும், வரும் விடையான 2 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் , இப்படியாக முன்னாள் உள்ள எண்ணுடன் கூட்டினால் அடுத்து அடுத்து எண்கள் கிடைக்கும், அவைகளை எழுதிக்கொண்டால் ஒரு வரிசை கிடைக்கும்,
அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS ஆகும்,
இவ்வாறு கண்டுபிடித்த எண்களை வைத்துக்கொண்டு FIBONACCI அவர்கள் சில விசயங்களை கண்டுபிடித்தார்,
அவர் கண்டுபிடித்த அந்த விஷயம் தான் அனைவராலும் இன்று கொண்டாடப்படும் GOLDEN NUMBER, OR GOLDEN MEAN NUMBERஎனப்படும் GOLDEN AVERAGE ஆகும் ,
இந்த என்னை தான் நாம் TECHNICAL ANALYSING இல் உள்ள FIBONACCI RETRACEMENT LEVELS இல் முக்கியமான நிலையாக பயன்படுத்துகிறோம்
61.8%:-
சரி அந்த FIBONACCI SERIAL NUMBERS இல் இருந்து இந்த முக்கியமான எண்ணான 61.8% ஐ அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்,
அதாவது இந்த வரிசையில் உள்ள எண்களை ஒன்றுடன் ஒன்றை FIBONACCI அவர்கள் இரண்டு விதமாக வகுத்துக்கொண்டார் (DIVIDING)
இப்பொழுது அவர் செய்த இரண்டு வகுத்தல் முறைகளில் முதல் முறையை பற்றி பார்ப்போம்
முதல் முறை
அதாவது இந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு அதற்க்கு பின்னால் உள்ள மற்றொரு நம்பரால் வகுப்பது (DIVIDING),
அவர் எப்படி வகுத்தார் என்பதை கீழே காண்க
அந்த வரிசை Fibonacci serial numbers
"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"
இரண்டு இழக்க நம்பரில் இருந்து வகுக்க (DIVIDING) ஆரம்பிப்போம்
21/13 விடை = 1.61538
34/21 விடை = 1.61904
55/34 விடை = 1.61764
89/55 விடை = 1.61818
144/89விடை = 1.61797
233/144விடை=1.61805
377/233விடை=1.61802
610/377விடை=1.61803
இப்படியாக இந்த முதல் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 1.618 ஆக இருந்தது
இரண்டாம முறை
இந்த முறை முதல் முறைக்கு நேர் எதிரான முறை ,
அதாவது அந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை அதன் அடுத்த இடத்தில் உள்ள நம்பருடன் வகுப்பது (DIVIDING)
அந்த வரிசை Fibonacci serial numbers
"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"
அதாவது கீழ் கண்ட முறையில்
13/21 விடை = 0.61904
21/34 விடை = 0.61764
34/55 விடை = 0.61818
55/89 விடை = 0.61797
89/144விடை = 0.61805
144/233விடை= 0.61802
233/377விடை= 0.61803
377/610விடை= 0.61803
இப்படியாக இந்த இரண்டாம் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 0.618 ஆக இருந்தது
இந்த இரண்டு வகுத்தலிலும் அவருக்கு கிடைத்த இரண்டு சராசரி விடைகள்
1.618 மற்றும் 0.618 ஆகும்
இந்த இரண்டு சராசரி விடைகளிலும் பொதுவானதாக .618 என்ற எண் இருந்தது ஆகவே அதை எடுத்துக்கொண்டார் ,
இப்பொழுது இந்த நம்பரை அரைகுறை நம்பராக இல்லாமல் முழு நம்பராக மாற்ற வேண்டி இதை 100 உடன் பெருக்குவோம் ,
பொதுவாக நாம் சதவிகிதங்களை 100 அடிப்படையில் தான் காண்போம் இல்லையா , ஆகவே இந்த என்னை 100 உடன் பெருக்கினால் வரும் விடை 100*.618 = 61.8 இப்படியாக கிடைத்தது ,
இந்த நம்பரானது மிக முக்கியத்துவமான அனைவராலும் கொண்டாடப்படும் GOLDEN MEAN OR GOLDEN RATIO ஆகும் ,
இந்த GOLDEN MEAN நம்பரை தான் (61.8%) நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL இல் மிக முக்கியமானதாக பார்க்கின்றோம்
மேலும் இந்த GOLDEN MEAN NUMBER OR GOLDEN AVERAGE NUMBER ஐ பற்றி நான் இங்கு கொஞ்சமாவது சொல்லியே ஆகவேண்டும்
இந்த நம்பரானது நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்த ஒரு MAGICAL நம்பர் ஆகும் ,
எப்படி என்று பார்ப்போம் வாருங்கள், இந்த விஷயம் ஒரு சுவாரசியமான விஷயம் கூட ,
மேலும் அனைத்தையும் சொல்ல முடியாததால் 1 , 2 ஐயாவது சொல்கிறேன்
இப்பொழுது இந்த 61.8% என்ற MAGICAL நம்பர் எப்படி நமது பூமியில் உள்ளது என்று பார்ப்போம்
நமது பூமி அதிக அளவு நீரினாலும் , குறைந்த அளவு நிலத்தினாலும் ஆனது , அது உங்கள் அனைவருக்கும் தெரியும் , ஆனால் இந்த நீரின் அளவு கிட்ட தட்ட 61.8% என்னஆச்சரியமாய் இருக்கா!
அடுத்து நம்மை வைத்தே ஒரு உதாரணம் பார்ப்போம் ,
உங்களது முழு உயரத்தை அளந்து கொள்ளுங்கள் , அந்த உயரத்தில் கிட்ட தட்ட 61.8% உயரத்தில் நமது முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளது,பெண்களுக்கு அவர்களின் மொத்த உயரத்தில் 61.8% உயரத்தில் தான் தாய்மை அடையக்கூடிய கர்ப்பபை உள்ளது என்றும் சொல்கிறார்கள் , இப்படியே இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்,
இப்பொழுது FIBONACCI அவர்களின் SERIAL NUMBER களின் முக்கியத்துவத்தை பற்றியும் பார்ப்போம்
உதாரணமாக நமது கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
நமக்கு 2 கைகள் அதில் 5 விரல்கள் , அந்த 5 விரல்களிலும் 3 அடுக்குகள், இவ்வாறு நிறைய சொல்லலாம்
இன்னும் பார்க்க வேண்டும் என்றால் இந்த LINK CLICK செய்து பாருங்கள்,
http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/fibnat.html#fingers
காய், கனி, செடி கொடிகளில், பூ இவைகளில் எல்லாம் எப்படி FIBONACCI NUMBER கள் அமைந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்
இவளவு விஷயங்கள் நமக்கு தேவை இல்லை தான் , இருந்ததாலும் இந்த FIBONACCI NUMBER எவ்வளவு முக்கியமானது என்று காட்டுவதர்ர்க்காக சொல்ல வேண்டி ஏற்ப்பட்டது , சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்
இந்த FIBONACCI இன் GOLDEN MEAN புள்ளியான 61.8 ஐ நாம் TECHNICAL ANALYSIS இல் FIBONACCI RETRACEMENT LEVEL கள் என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், மேலும் இதனுடன் 23.6%, 38.2%, 50%, 76.4%, போன்ற அளவுகளையும் பயன் படுத்துகிறோம் , இந்த மற்ற அளவுகள் எப்படி வந்தது என்பதனையும் பார்த்துவிடுவோம்
இந்த 61.8 ஐ 100 உடன் கழித்தால் கிடைப்பது = 38.2
இந்த 38.2 ஐ 61.8 உடன் கழித்தால் கிடைப்பது = 23.6
இந்த 23.6 ஐ 100 இல் கழித்தால் வருவது = 76.4
இந்த 68.1 உடன் 23.6 ஐ கூட்டினால் வருவது = 85.4
ஆகவே நாம் பயன்படுத்தும் FIBONACCI RETRACEMENT LEVEL களின் மொத்த வரிசையை பார்ப்போம்
61.8 - 32.8 = 23.6%
100 - 61.8 = 32.8%
PSYGOLOGICAL USE = 50%
GOLDEN NUMBER = 61.8%
100 - 23.6 = 76.4%
23.6 + 61.8 = 85.4%
அனுபவத்தில் = 89%
(சைக்காலஜியாக நாம் எப்பொழுதும் முழு, அரை (1, ½) ஆகியவைகளை பயன் படுத்துவோம் இல்லையா , அந்த வகையில் 50% மும் முக்கியமானதே), மேற்கண்ட அனைத்து அளவுகளையும் நாம் FIBONACCI RETRACEMENT LEVEL களில் பயன்படுத்துகிறோம் ,
இந்த அளவுகள் வந்த விதத்தை பார்த்துவிட்டோம் ,இப்பொழுது இந்த அளவுகள் உலக சந்தைகளின் வரை படங்களில் எப்படி அமைந்துள்ளது என்று கீழ் கண்ட படங்களை பாருங்கள் , படத்திலேயே அதன் அளவுகளை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் ,
FIBONACCI RETRACEMENT PICTURES: கீழே கொடுத்துள்ள படங்கள் அனைத்தும் 2009 MARCH மாதத்தில் உள்ள நிலைகள்
இந்த FIBONACCI அளவுகளை படத்தில் "0" என்ற குறிக்கப்பட்ட கோட்டில் இருந்தது ஆரம்பித்து , "100" என்ற குறிக்கப்பட்ட இடத்தில் முடித்துள்ளேன், இந்த இடைப்பட்ட உயரங்களுக்கான FIBONACCI RETRACEMENT அளவுகள் எந்த எந்த இடங்களில் வருகிறது என்று பாருங்கள்,
அந்த இடங்களில் இப்பொழுது நடந்து வரும் உயர்வுகள் தடை நிலைகளை சந்திக்கலாம் ,
இந்த 0 மற்றும் 100 என்ற புள்ளிகளானது, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வுக்கு முன் நடந்த வீழ்ச்சி இன் தொடக்கப் புள்ளியில் இருந்தும் , இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வு எந்த புள்ளியில் இருந்து ஆரம்பம் ஆனதோ அந்த புள்ளியில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது
SEMI CUP FORMATION பற்றியும், FIBONACCI அளவுகள் பற்றியும் பார்த்தோம், இப்பொழுது இந்த FIBONACCI அளவுகளை எப்படி பங்கு சந்தையில் பயன்படுத்துவது என்று பார்ப்போம், பொதுவில் இது போன்ற விசயங்களை நேருக்கு நேராகத்தான் சொல்ல வேண்டும், அப்பொழுது தான் தெளிவாக புரியும், இல்லையேல் குழப்பங்கள், உடனே ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாமை போன்ற தடங்கல்கள் ஏற்படலாம், இருந்தாலும் முடிந்த வரை எளிமையாக விவரிக்க முயற்ச்சிக்கின்றேன்,
இந்த FIBONACCI அளவுகளை எப்பொழுது பங்கு சந்தையில் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம், அதாவது ஒரு வடிவம் தொடர்ந்து உயர்வதற்க்காகவோ அல்லது தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்காகவோ BREAK OUT பெற்றுள்ளது என்று நிலை வரும் பொழுது, அந்த வடிவத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை இலக்காக பெற்று இருக்கும்,
அதே நேரம் BREAK OUT பெற்ற உடனே நேராக அந்த புள்ளியை சென்று அடையாது! நாம் முன்னர் பார்த்த HIGHER TOP, HIGHER BOTTOM, அல்லது LOWER TOP LOWER BOTTOM என்ற முறையில் தான் நகரும், அதே நேரம் ஒரே வீச்சில் (IN A SINGLE SWING) முழுவதுமான இலக்கையும் அடைந்து விடாது,.
முதலில் அடைய வேண்டிய இலக்கில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அடையும், அடுத்து சற்று இளைப்பாறல் அல்லது PROFIT BOOKING என்ற காரணத்திற்க்காக சற்று கீழே வரும், பிறகு மறுபடியும் உயரத்துவங்கும், இவ்வாறு மெல்ல மெல்ல தனது முழுமையான இலக்கை அடையும், இங்கே தான் நாம் நமது FIBONACCI அளவுகளை பயன்படுத்தி அந்த இளைப்பாறல் அல்லது PROFIT BOOKING எந்த புள்ளியில் வரும் என்பதை அந்த வடிவம் BREAK OUT பெற்றவுடனே நாம் அறிந்து கொள்ளலாம்,
அதாவது நாம் முந்தய பதிவில் பார்த்த FIBONACCI RETRACEMENT அளவுகலான 23.6%, 38.2%, 50%, 61.8%, 76.4%, 85.4% 100% இந்த சதவிகிதங்களின் அடிப்படையில் தான் BREAK OUT பெற்றவுடன் பங்குகள் நகரும், சரி இந்த FIBONACCI அளவை எப்படி பங்குகளின் வரை படங்களில் அளக்க வேண்டும் என்று பார்ப்போம்,
அதாவது இந்த FIBONACCI அளவை அளக்க இரண்டு புள்ளிகள் நமக்கு தேவை, அதாவது ஒரு LOW புள்ளி, மற்றும் ஒரு HIGH புள்ளி, எதற்க்காக இந்த இரண்டு புள்ளிகள் என்று முதலில் கொஞ்சம் பார்த்து விடுவோம், அதாவது ஒரு மனிதனின் உயரத்தை காண வேண்டுமாயின் அவனது பாதத்தில் இருந்து (LOW POINT) தலை வரை (HIGH POINT) அளந்து தானே உயர்த்தை காண்போம்,
அதே போல் தான் ஒரு வடிவத்தின் உயரத்தை அறிய அந்த வடிவத்தின் LOW புள்ளி மற்றும் HIGH புள்ளியை வைத்து தான் அந்த உயரத்தை அறிய முடியும், அப்படி கிடைத்த உயரம் தான் அந்த குறிப்பிட்ட பங்கு BREAK OUT பெற்றவுடன் அதன் இலக்காக இருக்கும், ஆகவே இப்படி கிடைத்த இலக்கை (உயரத்தை) நாம் நமது FIBONACCI அளவுகளில் பார்த்த சதவிகிதங்களின் அடிப்படையில் தான் அந்த பங்கு நகர்ந்து அடையும் ,
மேலும் இந்த சதவிகிதங்கள் எந்த எந்த புள்ளிகளில் சரியாக இருக்கும் என்பதினை அறிய தான் இந்த LOW மற்றும் HIGH புள்ளிகள், முதலில் இந்த FIBONACCI அளவை LOW புள்ளியில் இருந்து HIGH புள்ளிக்கு கொண்டு சென்று சேர்தோமானால், அடுத்த ஒவ்வொரு சதவிகித அளவுகளும் எந்த எந்த புள்ளிகளில் வரும் என்பது நமக்கு தெரியும், இப்படியாக நாம் நமது இலக்குகள் அடைவதற்கு முன் எந்த எந்த இடங்களில் சில சில தடைகள் வரும் என்பதினை அறிந்து இதன் உதவியுடன் நமது வர்த்தகத்தை செம்மையாக செய்யலாம்,
சரி அடுத்த வடிவத்தினை பற்றி பார்ப்போம், இது வரை CUP மற்றும் CUP WITH HANDLE என்ற வடிவங்களை பற்றி பார்த்தோம், அடுத்து SEMI CUP, SEMI CUP WITH HANDLE என்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்,
SEMI CUP வடிவம்
CUP வடிவம் என்பது U வடிவில் அமைந்து இருப்பது, இதில் TOP என்ற தொடக்கம் ஆரம்பித்து, LOW என்ற BOTTOM புள்ளி வரை சென்று, மறுபடியும் அந்த TOP என்ற புள்ளியை அடையும் போது CUP என்ற வடிவம் முழுமை அடையும்,
அதே போல் தான், ஆனால் இதில் SEMI CUP என்பது அந்த CUP இன் TOP என்ற புள்ளியை அடையும் முன்பே சில தடைகளை சந்தித்து, சற்று கீழே வந்து ஒரு சில நாட்கள் கழித்து, சில ஏற்ற இறக்கங்கள் முடிந்த பிறகு மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து சற்று கீழே இறங்க ஆரம்பித்ததோ, அந்த புள்ளியை மறுபடியும் மேலே கடக்கும் போது SEMI CUP என்ற வடிவம் BREAK OUT பெற்று முன்னேற ஆரம்பிக்கும்,
இதில் SEMI CUP இன் உயரம் மேலே இலக்காக அமையும், இதன் முழு இலக்குகளும் அடையும் முன் நாம் முன்னர் பார்த்த FIBONACCI அளவுகளின் படி வருசயாக தனது இலக்கை அடையும், மேலும் இதில் CUP என்ற வடிவம் முழுமையாக இல்லாமல் சற்று அரை குறையாக இருப்பதால் இதனை SEMI CUP என்று அழைக்கின்றோம், சரி SEMI CUP ன் படத்தை பாருங்கள்
-----------------------
அடுத்து SEMI CUP WITH HANDLE
இந்த வடிவத்தை பொறுத்த வரை முன்னர் பார்த்த SEMI CUP ஐ போன்று வடிவம் ஏற்பட்டு பிறகு HANDLE என்ற வடிவம் சற்று நாட்கள் TIME எடுத்து ஒரு சிறிய CUP போன்ற வடிவத்தை, அந்த பெரிய CUP வடிவத்திற்கு அருகிலேயே HANDLE ஆக பெற்று இருப்பது ஆகும்,
இதில் முதல் இலக்காக HANDLE இன் உயரமும், அது முடிந்த பின்பு அடுத்து சில இளைப்பாறல் மற்றும் CONSOLIDATION பெற்று மறுபடியும் CUP இன் இலக்கை அடையும், இதுவும் நாம் முன்னர் பார்த்த FIBONACCI அளவுகளின் படி நகரும், இதிலும் CUP என்ற வடிவம் முழுமையாக இல்லாமல் சற்று அரை குறையாக இருப்பதால், இதனை SEMI CUP WITH HANDLE என்று அழைக்கின்றோம், சரி இந்த SEMI CUP WITH HANDLE வடிவத்தின் படத்தையும் பாருங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக